கோவை : கோவையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அய்யா மணிமண்டபத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (பிப்.,06) திறந்து வைக்கிறார்.

விவசாயிகளுக்காக வாழ்ந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அய்யாவின் சேவைகளை போற்றும் வகையில், தமிழ்நாடு அரசு செய்தித்துறையின் சார்பில் அன்னூர் வட்டம், வையம்பாளையத்தில் ரூ. 1.50 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இம்மணிமண்டபத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை மறுநாள் காலை 09.30 மணியளவில் திறந்து வைக்கிறார்.
இவ்விழாவில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

மேலும், அனைத்து விவசாய சங்க தலைவர்கள், பிரதிநிதிகள், திரளான விவசாயிகள் பங்கேற்க உள்ளார்கள். தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசின் சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.