கோவை : 30-வது சாலை பாதுகாப்பு வார விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் (பொ) துரை.இரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

இந்தப் பேரணியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், ஓட்டுநர்கள், ஊர்காவல் படையினர், வாகன விற்பனை முகவர்கள், புகைபரிசோதனை மைய நிறுவன உரிமையாளர்கள், தன்னார்வலர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணியானது அண்ணாசிலை, லட்சுமி மில்ஸ், பாப்பநாயக்கன்பாளைம், மகளிர் பாலிடெக்னிக், காந்திபுரம் நகர பேருந்து நிலையம், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் வழியாக வ.உ.சி பூங்காவினை அடைந்தது.
இப்பேரணியில் கலந்து கொண்ட அனைவரும், தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தியும், வாகனத்தினை இயக்கும்போது கைப்பேசியில் பேசாதே, மித வேகம், மிக நன்று, படியில் பயணம் நொடியில் மரணம், சாலையில் சாகசம் செய்யாதே என்பது போன்ற விழிப்புணர்வு வாசகங்களை வழிநெடுகிலும் உரக்கச் சொல்லிச் சென்றனர்.
கோவை மாவட்டத்தில் இன்று தொடங்கும் சாலை பாதுகாப்பு வார விழாவானது, தொடர்ந்து 10-ம் தேதி வரை நடைபெறுகின்றது. அதன்படி, நாளை பள்ளி மாணவர்களுக்குப் போட்டி தேர்வும், 06-ம் தேதி கோவை மாவட்டத்தின் முக்கியச் சந்திப்புகளில் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து காந்திபுரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும், சாலை பாதுகாப்பு தொடர்பான வீதிநாடகம் நடைபெறுகின்றது. 07-ம் தேதி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து நடைபேரணி நடைபெறுகின்றது.
08-ம் தேதி கனரக ஓட்டுநர்களுக்கு கோவை மாவட்டத்திலுள்ள வேலுமணியம்மாள் கலையரங்கத்தில் இலவச கண் பரிசோதனை, இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதிக்கும் முகாம் நடைபெறுகின்றது. 09-ம் தேதி அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சாலைபாதுகாப்பு தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்குவதும், சிகப்பு நிற பிரதிபலிப்பான்கள் ஒட்டும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. சாலைபாதுகாப்பு வார விழாவின் நிறைவு நாள் விழாவாக 10-ம் தேதி சாலை பாதுகாப்பு தொடர்பாக சிறப்பாக வாகன சோதனை மேற்கொள்ளுதல், சாலை பாதுகாப்பு உறுதி மொழி என பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றது.
இந்த நிகழ்ச்சியில், மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், போக்குவரத்துறை இணை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் குமரவேல், பால்ராஜ், பாஸ்கரன், ராஜு மற்றும் போக்குவரத்துத் துறை, காவல்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.