திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஊழியர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தை மண்டல அலுவலகமாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் (தனிபொறுப்பு) சந்தோஷ் குமார் கங்க்வாரை திருப்பூர் எம்.பி சத்தியபாமா இன்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :- டெல்லியில் நடந்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி அலுவலக நிறுவன நாள் நிகழ்ச்சி ஒன்றில், திருப்பூர் மாவட்ட அலுவலகம் 2018-ம் ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட மாவட்ட அலுவலகம் என்ற சிறப்பு விருதை, தங்களின் கரத்தால் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டதை தங்களின் கவனத்துக்கு கொண்டுவரவிரும்புகிறேன்.

திருப்பூர் வருவாய் மாவட்டம் முழுமைக்கும் பெரும்பாலும் பரவியுள்ள இந்த அலுவலகத்தின் வரம்பில் திருப்பூர், பல்லடம், காங்கேயம், தாராபுரம், அவினாசி, ஊத்துக்குளி போன்ற பகுதிகளில் செயல்படும் 3,500-க்கும் அதிகமான எண்ணிக்கையிலான நிறுவனங்கள் உள்ளன. இந்த அலுவலகத்தின் வரம்புக்குள் 2.25 லட்சத்துக்கும், அதிகமான ஊழியர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் உள்ளனர். மேலும், புலம்பெயரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் மாதம் தோறும் அதிகரித்து வருகிறது.
பிரதம மந்திரி ரோஜ்கார் புரொட்சாஹன் திட்டத்தின் பயன்களை 2 லட்சத்துக்கும் அதிகமாக பயனாளிகளுடன் செயல்பட்டு வரும் திறன்வளர்ப்புத் திட்டத்திற்கு ஊக்கம் தரும் முதலாளிகளுக்கு, திருப்பூர் மாவட்ட அலுவலகம் முக்கிய பணியை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் பதிவு பெற்றுள்ள நிறுவனங்களில் 25 சதவிகிதம் இந்த திருப்பூர் அலுவலகத்தின் கீழ் வருகிறது.
ஜீவன் பிரமாண பத்திரம் பெற கடந்த ஆண்டில் 10,000-க்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களை பதிவு செய்து திருப்பூர் மாவட்ட அலுவலகம் தன்னிடம் வைத்துள்ளது. ஆதாரில் சேர்க்கை மற்றும் திருத்தம் செய்ய உதவும் சேவை மையமும் இந்த அலுவலகத்தில் அமைந்து சுமார் 140 முதல் 150 பேர் சராசரியாக பயன்பெறுகின்றனர். மேலும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அலுவலக வரம்பிற்குள் வரும் ஊழியர்களின் அதிகரித்து வரும் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அதிக இடவசதி இந்த அலுவலகத்துக்கு தேவைப்படுகிறது.
இந்த அலுவலகத்தை தரம் உயர்த்த வேண்டும் என்று ஊழியர்கள் அமைப்புகளும், பணிவழங்கும் அமைப்புகளும் வலியுறுத்தி அதுபற்றிய செய்திகள் நாளேடுகளிலும் வெளிவந்துள்ளன. இந்த அலுவலகத்தை தரம் உயர்த்துவதால் லட்சக்கணக்கான ஏழை ஊழியர்களுக்கு சேவை புரியவும், சமூகத்தின் நல்லிணக்கத்தை கொண்டுவரவும் வழிஅமையும். எனவே, இந்த திருப்பூர் மாவட்ட அலுவலகத்தை மண்டல ஊழியர் வருங்கால வைப்பு நிதி அலுவலகமாக தரம் உயர்த்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.