நீலகிரி : நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 211 கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் ப.செல்வராஜ் பெற்றுக் கொண்டார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.செல்வராஜ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 211 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.
பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் அளித்த இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பரிசீலனை செய்து தகுதி இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். அதோடு, மட்டுமல்லாமல் கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு துறை ரீதியான அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் உத்தரவிட்டார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதியிலிருந்து, உதகை குளிச்சோலை பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் குழந்தைகளுக்கு படிப்பு செலவிற்காக தலா ரூ.10,000 வீதம் ரூ. 20,000-மும், மேலூர் ஊராடா பகுதியைச் சேர்ந்த சீதாலட்சுமியின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.20,000-மும் வழங்கப்பட்டது.
இதேபோல, சரவணக்குமார் என்பவருக்கு மருத்துவ செலவிற்காக ரூ.15,000-மும், உதகை குளிச்சோலை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கு தொழில் தொடங்குவதற்காக ரூ. 10,000-மும் ஆக மொத்தம் 5 நபர்களுக்கு ரூ. 85,000-த்திற்கான காசோலையினையும், கோத்தகிரி, குன்னூர், கூடலூர் வட்டத்தைச் சார்ந்த 6 நபர்களுக்கு ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை பெறுவதற்கான ஆணையினை மாவட்ட வருவாய் அலுவலர் ப.செல்வராஜ் வழங்கினார்.