ஊழல்வாதிகளையும், குற்றவாளிகளையும் காப்பாற்ற முயல்கிறார் மம்தா பானர்ஜி : கோவையில் பா.ஜ.க தேசிய செயலாளர் குற்றச்சாட்டு

கோவை : மம்தா பானர்ஜி ஊழல்வாதிகளையும், குற்றவாளிகளையும் காப்பாற்ற முயல்கிறார் என கோவையில் பா.ஜ.க தேசிய செயலாளர் முரளிதர ராவ் குற்றம்சாட்டி உள்ளார்.


கோவை : மம்தா பானர்ஜி ஊழல்வாதிகளையும், குற்றவாளிகளையும் காப்பாற்ற முயல்கிறார் என கோவையில் பா.ஜ.க தேசிய செயலாளர் முரளிதர ராவ் குற்றம்சாட்டி உள்ளார். 

கோவை மாவட்டம், அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் பா.ஜ.க தேசிய செயலாளர் முரளிதர ராவ் செய்தியாளர்களை சந்தித்தார். 



அவர் பேசியதாவது :- தமிழக தேர்தல் களத்தை பாஜக உற்று நோக்கி வருகிறது. 5 ஆண்டு கால ஆட்சியில் பா.ஜ.க தேசிய அளவிலும், தமிழ்நாடு அளவிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளது. எந்த ஆட்சியும் செய்ய முடியாத சாதனையை செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் எங்களை போன்ற சாதனைப் பட்டியல் இல்லை. 5 ஆண்டில் அனைத்து துறையிலும் வளர்ச்சியை கொண்டு வந்துள்ளோம். 

பிப்ரவரி 26 -ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டலங்களில் உள்ள கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக உரையாற்ற உள்ளார். பிப்பரவரி 28 -ல் மத்திய அரசு மூலம் பயனடைந்தவர்கள், தொண்டர்கள் வீட்டின் முன் விளக்கு ஏற்றும் கமல் ஜோதி நிகழ்ச்சி நடைபெறும். மேலும், நாடு முழுவதும் உள்ள 4100 சட்டமன்ற தொகுதிகளில் இரு சக்கர வாகன பேரணி தொகுதி வாரியாக மார்ச் 2 -ம் தேதி நடைபெறும். 



தமிழகத்தில் கூட்டணிக்கு தயாராக இருக்கிறோம். சில கட்சிகளுடன் பேசி வரும் நிலையில், விரைவில் கூட்டணி குறித்து விவரங்கள் விரிவாக தெரிவிப்போம். மேற்கு வங்கத்தில் நடைபெறுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. மம்தா பானர்ஜி ஊழல்வாதிகளையும், குற்றவாளிகளையும் காப்பாற்ற முயல்கிறார். மேற்கு வங்கத்தில் பா.ஜக.,வினர் பேரணி நடத்தக் கூட அனுமதிக்கப்படுவதில்லை. மம்தா பானர்ஜிக்கு ஆதரவு அளிக்கும் தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு இது போன்ற சூழல் ஏற்பட்டால் தான் புரியும், இவ்வாறு அவர் பேசினார். 

மேலும், வைகோ கடந்த காலங்களில் தி.மு.க குறித்தும், காங்கிரஸ் குறித்தும் எவ்வாறு விமர்சித்து வந்தார் என்பதை அறிவோம் என சுட்டினார். ஆகையால், நாங்கள் எப்போதும் விவாதங்களுக்கு, உரிய ஆதாரங்களுடன் தயாராக உள்ளோம். எங்களுடன் விவாதிக்கத் தயாரா என அழைப்பு விடுத்தார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...