உதகையில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி : 200 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

நீலகிரி : சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, உதகையில் இன்று நடைபெற்ற சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியில், 200 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

நீலகிரி : சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, உதகையில் இன்று நடைபெற்ற சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியில், 200 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். 



சாலை பாதுகாப்பு குறித்து அனைத்து மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று தொடங்கிய 30 -வது சாலை பாதுகாப்பு வார விழா வரும் 10 -ம் தேதி வரை நடைபெறுகிறது. 

இதையடுத்து, இன்று உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தொடக்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினார். இப்பேரணி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக, சேரிங்கிராஸ் பகுதியை சென்றடைந்தது. 



இந்த பேரணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், சுற்றுலா வாகன ஓட்டிகள், வாகன பயிற்சி பள்ளி பயிற்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 200 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். 

மேலும், சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வரும் நாட்களில் தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி, ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகளும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டிகள் ஆகியனவும் நடத்தப்படவுள்ளன. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...