நீலகிரி : உதகை மத்திய பேருந்து நிலையம் அருகில் இருந்த 10 -க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை மாவட்ட நிர்வாகம் அகற்றியது.
நீலகிரி : உதகை மத்திய பேருந்து நிலையம் அருகில் இருந்த 10 -க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை மாவட்ட நிர்வாகம் அகற்றியது.
நீலகிரி மாவட்டம், உதகையில் பொதுமக்கள் செல்லும் நடை பாதையில் ஆக்கிரமைத்து வைக்கப்பட்ட கடைகளை மாவட்ட ஆட்சியரின் உத்தவின் பேரில் வருவாய் கோட்டாச்சியர், தேசிய நெடுஞ்சாலை துறை, நகராட்சி நிர்வாகம் தலைமையில் 10 க்கும் மேற்பட்ட கடைகளை ஊழியர்கள் அகற்றினர்.

அப்போது வருவாய் கோட்டாச்சியர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- தேசிய நெடுஞ்சாலைகளில் இக்கடைகள் வைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் நடந்து செல்ல இடையூறாக இருப்பதால், கடைகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்று இடம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆக்கிரமைப்பு கடைகளை அகற்றும் போது கடை உரிமையாளர்கள் தாமதமாக பொருட்களை எடுத்து வைத்ததால் அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் ஊழியர்களைக் கொண்டு பொருட்களை வெளியே எடுத்து வைத்தனர். இதனால். அப்பகுதியில் கூட்டம் கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.