சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணமில்லை : தமிழக அரசின் பதிலால் பொதுமக்கள் நிம்மதி

கோவை : உடுமலையில் நடமாடி வரும் சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை : உடுமலையில் நடமாடி வரும் சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்திலுள்ள பெரியதடாகம் ‌வனப்பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சின்னத்தம்பி என்ற காட்டுயானையை பெரிய போராட்டத்திற்கு பிறகு மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். கும்கி யானைகள் முட்டியதில் பலத்த காயங்களுடன், தந்தங்கள் உடைந்த நிலையில், வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள டாப்சிலிப் வனப்பகுதிக்கு சின்னத்தம்பி யானை கொண்டு செல்லப்பட்டது.

சின்னத்தம்பி யானையின் இருப்பிடத்தை அறிய அதன் உடலில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தியிருந்தனர். ஆனால் டாப்சிலிப் பகுதியில் விடப்பட்ட யானை சின்னத்தம்பி இரண்டு நாட்களுக்குள் மீண்டும் ஊருக்குள் புகுந்தது. கோட்டூர், அங்கலக்குறிச்சி சுற்றுப்பகுதிகளிலுள்ள தென்னந்தோப்புகளில் புகுந்த சின்னத்தம்பியை வனத்துறையினர் மீண்டும் காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.

இதனிடையே, சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார். மேலும், இதற்காக, கலீம், மாரியப்பன் ஆகிய கும்கி யானைகள் உடுமலைக்கு அழைத்து வரப்பட்டன. இதனிடையே, சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்கள் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்தது. அப்போது, சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. சின்னத்தம்பியை காட்டுக்குள் அனுப்பவே முயற்சி செய்யப்பட்டு வருவதாக தெரிவித்த தலைமை வனப்பாதுகாப்பு அதிகாரி, சின்னத்தம்பி யானைக்கு சிகிச்சை அளிக்கும் முறை குறித்தும் விவாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தமிழக அரசின் இந்த பதிலால் கோவையைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வன ஆர்வலர்கள் நிம்மதியடைந்துள்ளனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...