கோவை : கோவில்பாளையம் அருகே உள்ள ஆசியன் பொறியியல் கல்லூரியின் விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டைப் பாளையம் அருகே செயல்பட்டு வரும் ஆசியன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற மாணவர் முதலாம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்து வந்தார். இவர் அக்கல்லூரியின் விடுதியிலேயே தங்கி தனது கல்வியைத் தொடர்ந்து வந்தார். இந்த நிலையில், விடுதி அறையில் யாரும் இல்லாத நிலையில், மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகம், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒரேயொரு போலீஸ் அதிகாரி, மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும், மாணவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து ஏதேனும் தடயம் இருக்கிறதா..? என அறை முழுவதும் சோதனை மேற்கொண்டனர். ஆனால், எந்த தடயும் சிக்கவில்லை.
மாணவனின் தற்கொலை குறித்து சக மாணவர்களிடம் கேட்ட போது, "ஹரிஹரன் கடந்த சில நாட்களாக மனமுடைந்தே காணப்பட்டான். அவனுக்கு குறைந்த அளவிலான நட்பு வட்டாரங்களே உள்ளன. அவரது அறையில் தங்கும் 5 நண்பர்கள் விடுப்பில் இருந்த நிலையில், அவன் இந்த முடிவை எடுத்துள்ளான்," என்றனர்.
மாணவன் ஹரிஹரனின் தற்கொலை சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்கக் கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டத்தைப் பெரிது படுத்தாமல், மாணவர்கள் அமைதி காக்குமாறு கல்லூரி நிர்வாகத்தினர் வலியுறுத்தினர்.