கோவையில் வீட்டின் கதவை உடைத்து 65 பவுன் தங்க நகை மற்றும் ரூ.20 ஆயிரம் கொள்ளை

கோவை : போத்தனூர் அருகே வீட்டின் பின்புறக் கதவை உடைத்து 65 பவுன் தங்க நகை, ரூ.20 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போத்தனூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை : போத்தனூர் அருகே வீட்டின் பின்புறக் கதவை உடைத்து 65 பவுன் தங்க நகை, ரூ.20 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போத்தனூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

கோவை, போத்தனூர் அருகே உள்ள பாரதிநகர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சைமன் கிறீஸ்ட்டோபர் (48). இவர் பீளமேடு அருகே உள்ள டிராவல்ஸ் அலுவலகத்தில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் குடும்பத்துடன் குன்னூரில் படிக்கும் தன் மகளை பார்க்க சென்றுவிட்டு, நேற்றிரவு வீடு தி௫ம்பினர். மேலும், வீட்டைத் திறந்து உள்ளே சென்று பார்க்கையில் பீரோ உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 



இதையடுத்து, அதிலிருந்த பணம் நகை போன்றவை தி௫ட்டுபோனது தெரியவந்தது. இதையடுத்து, போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின் சம்பவ இடத்தில் செய்த விசாரணையில் கொள்ளையர்கள் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே நுழைந்து, முதல் தளத்திற்கு சென்று பீரோக்களை உடைத்துள்ளனர் என அறியப்பட்டது. 



அதன் பின்னர், பணம் மற்றும் நகைகளைத் தேடியதும், அங்கு எதுவும் கிடைக்காததால் கீழே வந்தவர்கள் அங்கு இருந்த அறையில் உள்ள பீரோவை உடைத்து 65 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொ௫ட்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் பாஸ்போர்ட், கேமரா, தங்க வாட்ச் போன்ற பொ௫ட்களை தி௫டி சென்றதும் தெரியவந்துள்ளது. 

இந்த சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் கைரேகைகளை கொண்டும், சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...