கோவை : கோவை, அவிநாசி சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் கடந்த 1 -ம் தேதி முதல் நகைக் கண்காட்சி நடந்து வருகிறது. இங்கு ஏராளமான அரங்குகளில் புதிய வடிவங்களில் நகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இந்த கண்காட்சிக்கு நேற்று முன்தினம் மாலை 4 பெண்கள் உட்பட 6 பேர் வந்து ஒவ்வொரு அரங்காகச் சென்று பார்வையிட்டனர். அப்போது, இவர்களில் ஓர் ஆண், 2 பெண்கள் நிகழ்ச்சியை நடத்துபவர்களிடம் பேச்சு கொடுத்து கவனத்தை திசை திருப்பினர்.

இதையடுத்து, மற்றொரு ஆணும், 2 பெண்களும் ஓர் அரங்கிற்குள் நுழைந்து, அங்கிருந்த நகைகளைப் பார்வையிட்டனர். அங்கிருந்த விற்பனையாளரிடம், பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்த நகைகளின் விலை குறித்து கேட்டனர். அதற்கு விற்பனையாளர் பதில் கூறிக் கொண்டிருந்தார். அப்போது ஓர் பெண் விற்பனையாளருக்குத் தெரியாமல், அங்கு வைக்கப்பட்ட 24 பவுன் தங்க நகையை திருடி, அருகேயிருந்த மற்றொரு பெண்ணிடம் கொடுத்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, நகைகளை பிறகு வந்து வாங்குவதாக கூறிவிட்டு இவர்கள் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இவர்கள் சென்ற பின்னர், அந்த அரங்கில் இருந்த விற்பனையாளர் நகைகளைச் சரி பார்த்த போது 24 பவுன் நகை மாயமானது தெரிந்து, தனது நிறுவன மேலாளருக்கு தெரிவித்தார். நகை மாயமான சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையிலான ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். கண்காட்சி அரங்கில் வைக்கப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்டனர். அதில் கவனத்தை திசை திருப்பி, நகை விலை குறித்து கேட்டுக் கொண்டிருந்த பெண்கள் நகையைத் திருடிவிட்டு தப்பியது தெரிய வந்தது. முன்பாகவே, கண்காட்சி நடப்பது தெரிந்து, திட்டமிட்டு 2 ஆண்கள், 4 பெண்கள் ஒன்றாக வந்து கடை நிர்வாகியின் கவனத்தை திசை திருப்பி நகையை திருடிச் சென்றுள்ளனர்.
இந்த திருட்டு சம்பவத்தில், திருடப்பட்ட நகையின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும். இது தொடர்பாக நகை விற்பனை நிறுவனத்தின் மேலாளர் கவுரவ் சோனி அளித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் அடையாளம் தெரியாத 6 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.