கோவையில் வாகன ஓட்டுநர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் எனக் கோரி மனு

கோவை : வாகன ஓட்டுநர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் எனக் கூறி, கோவை மாவட்ட அனைத்து இந்திய சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நல சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.

கோவை : வாகன ஓட்டுநர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் எனக் கூறி, கோவை மாவட்ட அனைத்து இந்திய சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நல சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கார் ஓட்டுனர் ராஜேஷ். இவர் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவரை காரில் ஏற்றி கொண்டு, மற்றொருவரை அழைத்து செல்ல பாடி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அவரை தகாத வார்த்தைகள் திட்டி காரை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், பயணியின் அவமானப்படுத்தப்பட்டதால், கார் ஓட்டுநர் ராஜேஷ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது செல்போனில் இருந்த பதிவுகளின் அடிப்படையில், ராஜேஷின் தற்கொலைக்குக் காவல் ஆய்வாளர் தான் காரணம் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்த சம்பவத்திற்கு கோவை மாவட்ட அனைத்து இந்தியா சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நலசங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், ராஜேஷ் மரணம் போல் தமிழகத்தில் வேறு எங்கும் நடக்கக்கூடாது. இந்த கடந்த ஆண்டு மட்டும் 3 பேர் போலீசார் கெடுபிடியால் தற்கொலை செய்து உள்ளனர். 

எனவே, ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் மேம்படுத்தத் தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். நாளை ஒரு இதனைக் கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...