சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற கூடாது : கோவை மாவட்ட ஆட்சியருக்கு வன உயிரின ஆர்வலர்கள் மனு

கோவை : சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றுவது கொலை செய்வதற்கு சமம், அதனை கும்கியாக மாற்ற கூடாதென வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம், வன உயிரின ஆர்வலர்கள் மனு அளித்துள்ளனர்.


கோவை : சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றுவது கொலை செய்வதற்கு சமம், அதனை கும்கியாக மாற்ற கூடாதென வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம், வன உயிரின ஆர்வலர்கள் மனு அளித்துள்ளனர். 

கோவை மாவட்டம், தடாகம் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானைகள் விநாயகன் மற்றும் சின்னத்தம்பி. விவசாயிகளின் அழுத்தம் காரணமாக, இந்த இரண்டு காட்டு யானைகளை வனத்துறையினர் பிடித்து முதுமலை மற்றும் வரகழியாறு வனப்பகுதிகளில் விட்டுள்ளனர். இதில், சின்னத்தம்பி யானை தற்போது 100 கிலோ மீட்டர்களுக்கும் மேலாக பயணித்து, திண்டுக்கல் மாவட்டத்தை நெருங்கி வருகிறது. 

இதையடுத்து, உடுமலைப்பேட்டை அருகே குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வரும் இந்த யானையை பிடித்து கும்கியாக மாற்றுவதாக அரசு அறிவித்துள்ள நிலையில், இதற்கு வன உயிரின ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று மதியம் அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது. இதனிடையே, சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றுவதை கைவிட கோரியும், மீண்டும் தடாகம் பகுதியில் அதனை கொண்டு வந்து விடவும் கோரியும் வன உயிரின ஆர்வலர்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கத் திரண்டனர். 

இதுகுறித்து வழக்கறிஞர் பன்னீர்செல்வம் பேசும் போது, தடாகம் பகுதியில் செங்கல் சூளைகளுக்காக மண் எடுக்கப்படும் கனிம வள கொள்ளையை தடுத்து வந்த யானைகள் இடமாற்றம் செய்யப்படுகின்றன. சின்னத்தம்பி போன்ற இளவயது ஆண் யானையை கும்கியாக மாற்றுவது அதனை கொலை செய்வதற்கு சமம், என்றார். 

"கடந்த ஒரு வார காலமாக குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த நிலையில், தீப்பந்தங்கள் உள்ளிட்டவற்றை வைத்து விரட்டியபோது சின்னத்தம்பி யானை யாரையும் தாக்கவில்லை என்பதன் மூலம் அது சாதுவான யானை என்பது விளங்கும். எனவே, குடும்ப யானைகளை இழந்து வாடும் யானையை மீண்டும் அதனை அதன் வாழ்விடத்திலேயே வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இந்த கோரிக்கையை மனுவாக அளிக்கவுள்ளேன். மேலும், யானைகள் வழி மாறி வர கனிம வளங்கள் எடுக்கப்படுவது தான் காரணம். உணவு கிடைக்க பெறாததால் காட்டில் இருந்து வெளிவருகிறது. விவசாய நிலங்களில் கரும்பு, மக்காச்சோளம், வாழை ஆகியவை தவிர்த்து மாற்று பயிர்கள் பயிரிட வேண்டும். இப்பிரச்சினை குறித்து முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்," என்றார் வன உயிரின ஆர்வலரான சந்திரசேகர். 

இந்திய வனவிலங்கு நல ஆணைய ஒருங்கிணைப்பாளர் கல்பனா வாசுதேவன் கூறுகையில், "யானைகளை தொடர்ந்து அதன் வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்தி வருவதன் மூலம் வரும் காலங்களில் காடுகளே இல்லாத சூழல் ஏற்படும். யானை வாழ்விடங்களைக் காக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், என்றார். 



சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற கூடாது என வலியுறுத்தி மனு அளிப்பதற்காக வந்த வன உயிரின ஆர்வலர்கள் கைகளில் சின்னத்தம்பி யானையின் புகைப்படம் பொறித்த பதாகைகளை ஏந்தியபடி யானையை காக்க கோரி முழக்கங்களை எழுப்பினர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...