நீலகிரி : முதுமலை புலிகள் காப்பக சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீ தடுப்பு கோடு அமைக்கும் பணிகளில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்டது. இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை உறைபனி மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். இதனால், வனப்பகுதிகளில் உள்ள மரங்கள், புற்கள் என அனைத்தும் காய்ந்து கருகி காட்சியளிக்கும்.

இதன் காரணமாக வனப்பகுதிகளில் அவ்வப்போது காட்டுத்தீ ஏற்பட்டு பல ஏக்கர் தீயில் கருகி விடும். இந்நிலையில், காட்டுத்தீ ஏற்படாமல் இருக்கும் வகையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சிறியூர், சீகூர், மசினகுடி, சிங்காரா மற்றும் தெங்குமரஹாடா போன்ற வனப்பகுதிகளில் சாலை இருபுறங்களிலும் சுமார் 6 மீட்டர் தூரத்திற்கு தீ தடுப்பு கோடு அமைக்கும் பணியில் வனத்துறையினர், வேட்டைக் காவலர்கள், தீ தடுப்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் இந்த சாலைகளில் காட்டுத்தீ பரவாமல் இருக்க சாலையோரங்களில் புகைபிடிப்பது, எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்களை வீசாமல் இருப்பது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, வறட்சி சமயங்களில் வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் செயற்கை தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.
மேலும், இந்த சாலைகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்துச் சோதனை சாவடிகளிலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.