கோவையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் மண்டல மாநாடு

கோவை : கோவை மண்டலம், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் நீங்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள் எனும் மையக்கருத்தில் மண்டல மாநாடு நேற்று நடைபெற்றது.

கோவை : கோவை மண்டலம், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் நீங்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள் எனும் மையக்கருத்தில் மண்டல மாநாடு நேற்று நடைபெற்றது. 

இந்த மாநாடு கோவை காந்திபுரம் அரசுப் பொருட்காட்சி மைதானத்தில், மாலை 4 மணிக்கு அரங்கேறியது. இதில், பி.எஸ்.உமர் ஃபாருக் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழக தலைவர் ஷப்பீர் அஹ்மது தலைமை உரையாற்றினார். இதில், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 



ஷப்பீர் அஹ்மது பேசுகையில், "தனிமனிதரின் சுதந்திரம், சமத்துவம், நீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது தான் ஜனநாயகம். எந்த ஒரு மதத்தையும் ஏற்றுக் கொள்கின்ற, அதன் படி செயல்படுகின்ற உரிமையை அரசியல் சட்டம் ஒவ்வொரு தனிமனிதருக்கும் வழங்கியுள்ளது. இந்த உரிமையில் மத்திய, மாநில அரசுகள் தலையிடக் கூடாது. 

எவ்விதமான பக்கம் சார்போ, பாகுபாடோ இல்லாமல் நாட்டு மக்கள் அனைவருக்கும் சம நீதி கிடைக்க வேண்டும். எவர் மீதும் எவ்விதமான அக்கிரமமோ, கொடுமையோ, உரிமை பறிப்போ இழைக்கப்படக் கூடாது. மேலும், இந்தியாவின் மதசார்பற்ற தன்மை காக்கப்பட வேண்டும், என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...