கோவை : சட்டப்பூர்வமான நடவடிக்கையால் மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் கோவையில் நடைபெற்ற மேற்கு தொடர்ச்சி மலை உயிர்ச்சூழல் திருவிழா மற்றும் தேசிய மாநாடு நிறைவு பெற்றது.

மேற்கு தொடர்ச்சி மலையின் சட்டப்பூர்வமான பாதுகாப்பிற்காக, மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்கத்துடன் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் ஒருங்கிணைந்து தேசிய அளவிலான 3 நாள் மாநாடு கோவையில் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்.,1) தொடங்கியது. கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொடர்ந்து 3 நாட்கள் நடந்த இந்த மாநாட்டில், 6 மாநிலங்களைச் சேர்ந்த இயற்கை, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 1,500 பேருக்கும் மேல் கலந்து கொண்டனர்.
மேலும், சூழலியல் அறிஞர்கள், பழங்குடியின சமூக செயற்பாட்டாளர்கள், வேளாண்மை, வணிகம், ஊடகம், திரைத்துறை, எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள், இளைஞர்களும் திரளாகப் பங்கேற்றனர்.
கடந்த இரு தினங்களாக, மனித - விலங்குகள் மோதல், சட்டத்தின்படி இயற்கையைப் பாதுகாப்பது, இயற்கையைப் பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும், இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தும் படங்கள் திரையிட்டும், புகைப்படம் மற்றும் ஓவியக் கண்காட்சிகளும் நடைபெற்றன.
இந்த நிலையில், இந்த தேசிய மாநாட்டின் இறுதி நாளான இன்று, மாநாட்டின் விளக்க உரையை மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு குழுவின் தேசிய முன்னணி உறுப்பினர் வைஷாலி பாட்டீல் வாசித்தார். இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள் அனைவரும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள கவனக்குறைவே, சீரழிவின் தாக்கத்திற்கு வழிவகுத்திருப்பதாகவும், இது ஒரு மிகப்பெரிய பிரச்சனை உருவெடுத்திருப்பதாக கருதுவதாக அவர் தெரிவித்தார். மேலும், அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளை தலைவர்கள் தற்போது வரை முறையாக பயன்படுத்தாத நிலையில், சட்டதிட்டங்களை சீர்செய்ய வேண்டும் என மாநாட்டில் பரிந்துரைக்கப்பட்டது.
"வனஉரிமை சட்டம், உயிரியல் பன்முகத்தன்மை சட்டம் (2002) ஆகியவை வனத்துறை நிர்வாகிகளுக்கு பல்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது. மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதம் சட்டம், 2005-ன்படி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுற்றுச்சூழலை மீண்டும் கொண்டு வர முடியும்," இவ்வாறு வைஷாலி பாட்டீல் விளக்க உரையில் கூறினார்.

மேலும், சரணாலயங்கள், தேசிய பூங்காக்களில் பல ஆண்டுகளாக அழிந்து வரும் சில உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களில், மேம்பாட்டு நடவடிக்கைகள் என்ற பெயரில், தனியார் மற்றும் அரசு சார்பில் சாலை விரிவாக்கம், புதிய சாலையமைத்தல், ரயில்வே திட்டங்கள் மற்றும் ரியல் எஸ்டேட்கள், ரிசார்டுகள் என கட்டமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.
அதேவேளையில் இதுபோன்ற கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள தடையில்லா சான்றுகளை அதிகாரிகள் வழங்கும் போது, அழிந்து வரும் உயிரினங்களை அறிவியல்பூர்வமாக மீண்டும் கொண்டு வர அரசு அனுமதிப்பதில்லை என மாநாட்டில் குறிப்பிடப்பட்டது. மேலும், வனப்பகுதிகளில் சாலை மேம்பாடு, தேயிலை தோட்டங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தவும், மின்சார வேலிகள் அமைக்க எதிர்ப்பு, தடுப்பணைகளில் தேவையற்ற கட்டுமானங்கள், முறையற்ற சுற்றுலாக் கொள்கை ஆகியவற்றிற்கு எதிராகவும் மாநாட்டில் பங்கேற்றவர்கள் குரல் கொடுத்தனர்.
முன்னதாக, கேரளா, கோவா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், வரவிருக்கும் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் வன பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என முடிவு செய்தனர். அதாவது, எந்த வேட்பாளர் இயற்கைக் காரணிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு உறுதி அளிக்கிறாரோ..? அவருக்கே வாக்களிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இதனை பிற பிரதிநிதிகளும் ஏற்றக் கொண்டனர்.

மாநாட்டின் இறுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப் பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கே. காளிதாஸ் பேசுகையில், "ஆண்டுதோறும் பிப்ரவரி 1-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு தினம் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். கடந்த 1987-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி முதன்முறையாக மேற்கு தொடர்ச்சி மலையைப் பாதுகாக்க வலியுறுத்தி முதல் பேரணி நடத்தப்பட்டது. தொடர்ந்து, மேற்கு தொடர்ச்சி மலைப் பாதுகாப்புக் குழுவின், 9-வது மாநாடு இந்த ஆண்டு நடைபெற்றது," இவ்வாறு அவர் கூறினார்.