ஜெயலலிதா முதலமைச்சராவதற்கு மக்களாகிய நாங்கள் போட்ட பிச்சைதான் காரணம் : கோவையில் சீமான் ஆவேசம்

கோவை : ஜெயலலிதா முதலமைச்சர் ஆவதற்கும், செல்லூர் ராஜூ அமைச்சராக இருப்பதற்கும், மக்களாகிய நாங்கள் போட்ட பிச்சைதான் காரணம் என கோவையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


கோவை : ஜெயலலிதா முதலமைச்சர் ஆவதற்கும், செல்லூர் ராஜூ அமைச்சராக இருப்பதற்கும், மக்களாகிய நாங்கள் போட்ட பிச்சைதான் காரணம் என கோவையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரின் விடுதலை தொடர்பாக பேசாவிட்டால், வாக்கு விழாது என்ற நெருக்கடியை பல்வேறு போராட்டங்கள் மூலம் கொடுத்ததால்தான் ஜெயலலிதா அதுபற்றி பேசினார். பொறுப்பில் உள்ள அமைச்சர் அடிப்படை தெரியாமல் பேசக் கூடாது. நாசாவிற்கு அனுப்பி வைத்திருக்க வேண்டியவரை, பல்லைக் கடித்துக்கொண்டு சகித்துக்கொண்டு அமைச்சராக வைத்துள்ளோம். 

அனைத்து கட்சிகளை சம எதிரியாகத் தான் பார்த்துப் போட்டியிடவுள்ளோம். 20 பெண்கள், 20 ஆண்களுக்கு வாய்ப்பு வழங்க இருக்கிறோம். மத்திய இடைக்கால பட்ஜெட் அடுத்த 5 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையாகும். வாக்குகளைப் பறிப்பதற்கு மறைமுக தேர்தல் அறிக்கையான, மறைமுக கையூட்டாகத்தான் இருக்கிறது. ராமநாதபுரத்தில் நடந்த கடல் தாமரை மாநாட்டில் மீன் வளத்துறைக்கு தனி அமைச்சகம் என்று சொன்னவர்கள், கடந்த 4 ஆண்டுகளில் நிறைவேற்றாத போது, தற்போது சொல்வது வேடிக்கையாக உள்ளது. 

கட்சி ஆரம்பித்த பிறகு (ரஜினி) தஞ்சாவூர் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்கலாம் என்பது மோசமான போக்காகும். தனது திரைப்பட பேனர்களுக்கு பால் ஊற்றாதீர்கள் என விஜய், சூர்யா சொல்லும்போது, பெரிய நட்சத்திரம் ஆனதிலிருந்து பேனர்களுக்கு பால் ஊற்றுவதை நிறுத்துங்கள் என ஒருமுறை கூட ஏன் ரசிகர்களுக்கு ரஜினி சொல்லவில்லை. திரையில் நடிப்பதன் மூலம் மட்டுமே நாடு ஆள தகுதியை தராது. அப்படி என்றால் நல்லக்கன்னு, நெடுமாறன் போன்றவர்கள் யார்..?. ஹேக் செய்துதான் 2014-ல் பா.ஜ.க. வெற்றிபெற்றது என சையது சுஜா சொன்னதற்கு பா.ஜ.க. தலைமை ஏன் பதில் அளிக்கவில்லை. ஸ்டாலின் ஆட்சியில் இருக்கும்போது கிராம சபை நடத்தியிருந்தால், கிராமம் முன்னேறி இருக்கும், எனக் கூறினார். 

இறுதியாக கவுசல்யா பணியிடை நீக்கம் குறித்த கேள்விக்கு சீமான் பதிலளிக்கையில், "இந்தியாவில் இறையாண்மை உள்ளதா..? என்பதே கேள்வியாக உள்ளது. சமூக வலைதளங்களில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துபவர்கள், அநீதியை எதிர்ப்பவர்கள் மற்றும் இயற்கை வளங்கள் சுரண்டல்களை கேள்வி கேட்பவர்களை நக்சல்கள் என பல்வேறு முத்திரைகள் குத்தப்படுகின்றனர்," என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...