கோவையில் அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார்

கோவை : கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம் அருகே அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார்.

கோவை : கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம் அருகே அம்மா ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று திறந்து வைத்தார். 

பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது :- ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வை 'அம்மா ஐஏஎஸ் அகாடமி' நடத்துகிறது. சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் இன்று வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசு பணிகளுக்காக நடக்கும் போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்காக இங்கு முற்றிலும் இலவசப் பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. 

2019ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 'அம்மா ஐஏஎஸ் அகாடமி'-யில் உடனடியாக தொடங்கி நடத்தப்பட உள்ளன. கோவை மாவட்டத்திலிருந்தும், பிற மாவட்டங்களிலிருந்து சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்விற்கான இலவச வகுப்புகளில் கலந்து கொள்வதற்கான நுழைவுத் தேர்வு அடுத்த சில மாதங்களில் நடத்தப்பட இருக்கிறது.

நுழைவுத் தேர்வுக்கான தகுதிகளை மாணவ. மாணவியர்கள் இந்த மையத்தினை அணுகி தெரிந்து கொள்ளலாம். இதற்கென பிரத்தேயக வலைதளம் உருவாக்கப்பட உள்ளது. தகுதியான மாணவ, மாணவியர்கள் கட்டாயம் இலவசப் பயிற்சி வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இங்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வானது, அனைத்து மாணவ, மாணவியர்களும் எளிதில் எழுதக் கூடிய வகையிலேயே கேள்விகள் கேட்கப்படும். வருடத்திற்கு 500 மாணவ, மாணவியர்கள் குறையாமல் இந்த மையத்தில் இலவச பயிற்சி பெறுவர், எனக் கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், ஒ.கே.சின்னராஜ், வி.சி.ஆறுக்குட்டி, மாவட்ட ஆட்சியர் (பொ) துரை.இரவிச்சந்திரன, மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, சமூக ஆர்வலர் அன்பரசு, ஆலயம் பவுண்டேசன் நிர்வாகத்தினர் திரு.சந்திரசேகர், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...