கோவை : கோவையில் அரசின் சார்பில் நடத்தப்பட்ட வங்கிக் கடன் முகாமில், சுயதொழில் புரிய கடன் உதவிக் கோரி விண்ணப்பம் அளித்த 150 பயனாளிகளுக்கு வெறும் 3 மணி நேரத்தில் ரூ. 2 கோடி மதிப்பிலான கடன் உதவி வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் மூன்று கட்டமாக நடைபெற்ற சுய தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு மற்றும் கடன் உதவி வழங்கும் முகாம்களில் 1,733 பயனாளிகளுக்கு ரூ.33.94 கோடி மதிப்பிலான கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்கள்.
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் உதவியுடன் குனியமுத்தூர் ருக்மணி கண்ணன் வித்யலாயா மேல்நிலைப்பள்ளியில் இன்று “சுய தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாமை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர், 621 பயனாளிகளுக்கு ரூ.16.67 கோடி மதிப்பில் சுயதொழில் புரிவோருக்கான கடன் உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது :- கோவை மாவட்டத்தில் குறிப்பாக தொண்டாமுத்தூர் ஒன்றிய பகுதியில், கடந்த ஜனவரி 27-ம் தேதி நடந்த முகாமில் முதற்கட்டமாக 620 பயனாளிகளுக்கு ரூ. 8.5 கோடி மதிப்பிலான கடன் உதவியும், நேற்று ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்ற முகாமில் 492 பயனாளிகளுக்கு ரூ. 10.77 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற இந்த சிறப்பு வாய்ந்த முகாமில், 621 பயனாளிகளுக்கு ரூ. 16.67 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதில், குறிப்பாக இன்று கடன் உதவி கோரி விண்ணப்பித்த 15 ஆயிரம் நபர்களில் 150 நபர்களுக்கு விண்ணப்பித்த மூன்று மணி நேரத்தில் ரூ. 2 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது, என்றா.