கோவை : சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் சட்டவிரோதமாக தங்கம் கடத்திய 2 பயணிகளை கோவை விமான நிலைய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 47 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு ஏர் அரேபியா என்ற விமானம் வந்திறங்கியது. விமானத்தைவிட்டு இறங்கி வந்த பயணிகளிடம் கோவை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, மலப்புரத்தைச் சேர்ந்த உஸ்மான், பாலக்காட்டைச் சேர்ந்த ஷாஜஹான் ஆகிய இரண்டு பயணிகளிடம் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். அதில், இருவரும் மலக்குடல் வழியாக சுமார் 1,356 கிராம் மதிப்பிலான தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 46.78 லட்சமாகும்.
இதைத் தொடர்ந்து, பயணிகள் உஸ்மான், ஷாஜஹான் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், பணத்திற்காக தொடர் கொள்ளையர்களின் உத்தரவின் பேரில், இந்த சட்டவிரோத செயல்களில் அவர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது.