விமானத்தில் அழைத்துச் சென்று முதியவர்களின் ஆசையை நிறைவேற்றிய திருப்பூர் வர்த்தகர்

திருப்பூர் : அவினாசி அருகே தேவராயன் பாளையத்தைச் சேர்ந்த பின்னலாடை வர்த்தகர் ஒருவர், தனது கிராமத்தில் உள்ள முதியோர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, அவர்களை தனது சொந்த செலவில் கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்ற சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


திருப்பூர் : அவினாசி அருகே தேவராயன் பாளையத்தைச் சேர்ந்த பின்னலாடை வர்த்தகர் ஒருவர், தனது கிராமத்தில் உள்ள முதியோர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, அவர்களை தனது சொந்த செலவில் கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்ற சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 



அவினாசி தேவராயன் பாளையத்தை சேர்ந்த பின்னலாடை மொத்த விற்பனையாளர் ரவி. இவர், தனது பகுதியில் உள்ள ஏழை முதியவர்களின் ஆசையான, விமானத்தில் பயணம் செய்வதை நிறைவேற்ற வேண்டும் என விரும்பினார். அதன்படி, விமானத்தில் செல்ல ஆசைப்பட்ட ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த 65 முதல் 100 வயது வரையிலான 120 முதியவர்களை கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் இலவசமாக சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டார்.



இதனை அடுத்து, நண்பர்கள் சிலரின் உதவியுடன் 120 பேருக்கும் விமான டிக்கெட் எடுக்கப்பட்டு கிராமத்தில் இருந்து இன்று மதியம் கோவை விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை என சொகுசு பேருந்து மூலம் முக்கிய சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு, நாளை இரவு ஊர் திரும்பி வரும் வகையில் இந்த சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது. 



தொழிலதிபர் ரவி தொழில் நிமித்தமாக அடிக்கடி விமானப் பயணம் மேற்கொண்டிருந்தாலும், தனது கிராமத்தில் உள்ள வயதானவர்கள் விமானம் வானில் பறக்கும் போது, அதை அன்னாந்து பெருமூச்சோடு பார்ப்பது தனது நினைவில் அடிக்கடி வந்து போனதால், அவர்களின் ஆசையை நிறைவேற்ற இவ்வாறு செய்துள்ளதாக கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...