சோர்வான சின்னத்தம்பியின் 140 கி.மீ. நடைப்பயணம் விரைவில் முடிவுக்கு வருகிறது : கும்கி யானைகள் வரவழைப்பு

திருப்பூர் : தனது வாழ்விடத்தைத் தேடி உடுமலையில் சுமார் 140 கி.மீ. நடந்தே சோர்வடைந்த காட்டு யானை சின்னத்தம்பியை, கும்கி யானைகளுடன் மீண்டும் பிடிக்கும் பணியை வனத்துறையினர் நாளை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

திருப்பூர் : தனது வாழ்விடத்தைத் தேடி உடுமலையில் சுமார் 140 கி.மீ. நடந்தே சோர்வடைந்த காட்டு யானை சின்னத்தம்பியை, கும்கி யானைகளுடன் மீண்டும் பிடிக்கும் பணியை வனத்துறையினர் நாளை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

விவசாய நிலங்களை சேதப்படுத்தியதாக விநாயகன் மற்றும் சின்னத்தம்பி ஆகிய காட்டு யானைகளை பிடித்து, இடமாற்றம் செய்யுமாறு வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், முதற்கட்டமாக, விநாயகன் பிடிக்கப்பட்டு முதுமலையில் கொண்டு சென்று விடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த வாரம் சின்னத்தம்பியை வனத்துறையினர் மிகவும் போராடி பிடித்து, லாரியின் மூலம், டாப்ஸ்லிப் வரகளியாறு பகுதிக்கு இடமாற்றம் செய்தனர். இதையடுத்து, தனது சொந்த இருப்பிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட துயரத்தில் இருந்து மீளாத சின்னத்தம்பி, கடந்த 3 தினங்களாக பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி கிராமத்துக்குள் நுழைந்து, தனது வாழ்விடத்துக்குச் செல்ல முயற்சி செய்து வருகிறது. 

சின்னத்தம்பியை வனத்துறையினரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சுமார் 140 கிலோ மீட்டர் தொலைவுகளை கடந்து நடந்து சென்ற சின்னத்தம்பி, வழித்தடங்களில் பல்வேறு இடர்பாடுகள் இருந்தாலும், குடியிருப்புகள், விவசாய நிலங்கள் என எங்கும் எதிலும், எந்தவிதச் சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. 



இருப்பினும், சின்னத்தம்பியை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில் தான் முடிவடைந்தன. இந்த நிலையில், மடத்துக்குளம் அருகே நேற்று சின்னத்தம்பி மயக்கம் போட்டு விழுந்திருப்பது அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், மீண்டும் எழுந்து தனது பயணத்தை தொடர்ந்து வருகிறது.

இதனிடையே, சின்னத்தம்பி யானையைக் கூண்டில் அடைத்து கும்கி யானையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கோவையில் நடைபெற்று வரும் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு குறித்து சூழியல் மாநாடு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று அறிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு கோவையைச் சேர்ந்த பொதுமக்களும், வன ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், உடுமலையில் நடந்தே சோர்வடைந்த காட்டு யானை சின்னத்தம்பியை, கும்கி யானைகளுடன் மீண்டும் பிடிக்கும் பணியை வனத்துறையினர் நாளை அதிகாலை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து, கும்கி யானைகளான கலீம், மாரியப்பன் வரவழைக்கப்படுகின்றன. கலீம் ஏற்கனவே உடுமலைக்கு வந்தடைந்த நிலையில், கும்கி மாரியப்பன் கோழிக்குமிதி கும்கி முகாமில் இருந்து உடுமலைக்கு வந்து கொண்டிருக்கிறது.

இது குறித்து யானைகள் பற்றிய அனுபவ வல்லுநர் அஜய் தேசாய் கூறுகையில், “சின்னத்தம்பியை பிடிக்க வேண்டும் என்ற முடிவு தவிர்க்க முடியாதது. குடியிருப்பு பகுதிகளில் சின்னத்தம்பி நடமாடி வருவது, மனிதர்களுக்கும், யானைக்குமே தீங்கானது,” என்றார்.

இதனிடையே, சின்னத்தம்பியை பிடித்து கும்கியாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர சமூக ஆர்வாலர்கள் முடிவு செய்துள்ளனர்.

“சின்னத்தம்பியினால் எந்தவிதமான மோதல்களும் நடைபெற்றது இல்லை. ஆனால், தடாகம் பகுதியில் அதிகளவிலான மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க யானைகளை, வனப்பகுதிகளில் சுதந்திரமாக நடமாட விட வேண்டும்,” என்கிறார் ஆனைகட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜோஸ்வா.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...