திருப்பூர் : திருப்பூரை அடுத்த அலகு மலையில் 2-வது ஆண்டாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில், சீறிப்பாய்ந்து வரும் காளைகளை, காளையர்கள் ஆக்ரோஷமாக அடக்கி வருகின்றனர்.
திருப்பூர் : திருப்பூரை அடுத்த அலகு மலையில் 2-வது ஆண்டாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில், சீறிப்பாய்ந்து வரும் காளைகளை, காளையர்கள் ஆக்ரோஷமாக அடக்கி வருகின்றனர்.

திருப்பூரை அடுத்த அலகுமலையில் இரண்டாவது முறையாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பில் அலகுமலை பகுதியில் இரண்டாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதனை தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில், மத்திய விலங்குகள் நலவாரிய உறுப்பினர் விட்டல், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இப்போட்டியில் 500 காளைகளும், 550 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.போட்டி நடைபெறும் பகுதிகளில் வாகன வசதி, குடிநீர் வசதி, அரசு தெரிவித்த அனைத்து வழிகாட்டு முறைகள் பின்பற்றப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

வாடிவாசல் வழியாக ஆக்ரோஷமாக வந்த காளைகளை இளைஞர்கள் சீறீப்பாய்ந்து அடக்கி மகிழ்ந்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதற்கட்டமாக, 30-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. தமிழர்களின் இந்த வீரவிளையாட்டை 30,000-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து கண்டு களித்து வருகின்றனர்.