கோவை : கோவையில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து, மயக்க ஊசி மருந்துகளை திருடிச் சென்றவரை மருத்துவமனை ஊழியர்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும், தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.

கோவை -அவினாசி சாலையில் உள்ள சின்னியம்பாளையம் அருகே ஆர்.வி.எஸ். என்ற தனியார் மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது, வலி ஏற்படாமல் இருக்க பயன்படுத்தப்படும் மயக்க மருந்துகள், மருத்துவமனையின் ஒரு அறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நேற்று காலை இரண்டு நபர்கள் மயக்க மருந்து வைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்று அங்கிருந்த 8 மயக்க மருந்து பாட்டில்களை திருடினர். இதையடுத்து, அறையை விட்டு வெளியே வந்த இவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஊழியர்கள், அவர்களை பிடித்து சோதனை செய்தனர்.அதில், மயக்க மருந்துகளை போதை பயன்பாட்டுக்காக திருடியது தெரியவந்தது.
அப்போது, மருத்துவமனை ஊழியர்களை தள்ளிவிட்டு ஒருவர் தப்பியோடினார். பின்னர், பிடிபட்ட நபரை பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக புகாரும் அளித்துள்ளனர். பிடிபட்ட நபரிடம் போலீஸ் விசாரணை செய்ததில், இவர் சின்னியம்பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ் (45) என்பதும், தப்பி ஓடியவர் செல்வராஜ் என்பதும் தெரிந்தது.
மேலும், திருடிய மயக்க மருந்துகளை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதும், அவர்கள் இதை ஊசி மூலம் உடலில் செலுத்தி போதைக்காகப் பயன்படுத்துவது விசாரணையில் அம்பலமானது. இந்த மருந்து பாட்டில்களை ரூ. 200 முதல் ரூ. 500 வரைக்கும் விற்பனை செய்தும் வருகின்றனர். இதையடுத்து, போலீஸார் மோகன்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பியோடிய செல்வராஜை தீவிரமாக தேடி வருகின்றனர்.