நீலகிரி : கூடலூர் அருகே நக்சல் தடுப்புப் பிரிவு போலீசார் பயணித்த வேன், சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒரு காவலர் உயிரிழந்தார். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
நீலகிரி : கூடலூர் அருகே நக்சல் தடுப்புப் பிரிவு போலீசார் பயணித்த வேன், சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒரு காவலர் உயிரிழந்தார். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

உதகையில் இருந்து கூடலூர் நோக்கி சென்று கொண்டிருந்த நகசல் தடுப்புப் பிரிவு போலீஸ் வேனில், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 13 காவலர்கள் மற்றும் நக்சல் தடுப்பு வீரர்கள் என மொத்தம் 15 பேர் பயணித்தனர். இந்த வேன் தவளை மலை அருகில் சென்ற போது, நிலை தடுமாறி 100 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில், பயணித்த உடுலைப்பேட்டையைச் சேர்ந்த நக்சல் பிரிவு காவலர் ராஜா (35) என்பவர் உயிரிழந்தார்.

மேலும், 5 பேருக்கு தலை, கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இவர்கள் மீட்கப்பட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.