நீலகிரி : உதகையில் கேசினோ சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை செய்த போலீசார், ரூ. 45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

உதகையில் கேசினோ சூதாட்டம் நடக்கவிருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெ.சண்முகப்பிரியா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து, சூதாட்ட கும்பலை பின் தொடர்ந்த தனிப்படையினர், சூதாட்டத்தில் ஈடுபட இருந்த 8 பேரை கைது செய்தனர். மேலும், சூதாட்டப் பொருட்கள், லேப்டாப், பணப் பரிமாற்ற இயந்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெ.சண்முகப்பிரியா கூறியதாவது:- இன்று அதிகாலை 12.15 மணிக்கு உதகை கோரிசோலை பகுதியில் உள்ள சின்கிலர்ஸ் ஓட்டலில் பெங்களூர் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 6 பேர், அந்த ஓட்டல் பொது மேலாளர் மற்றும் மேலாளர் ஒத்துழைப்புடன் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் ரவிகுமார், திருமேனி, ஆய்வாளர்கள் ஜெயமுருகன், செல்வராணி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் ஓட்டலில் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது, சூதாட்ட பணம் ரூ. 1,17,900 மற்றும் 8 செல்போன்கள், பண பரிமாற்ற இயந்திரம், சூதாட்ட நோக்கர்கள் என ரூ. 45,39,990 பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இரண்டு 4 சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சூதாட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மாதாரப்பு விஜய் (39), பரமேஷ் (40), கர்நாடகாவைச் சேர்ந்த சதீஷ்குமார் (37), ஓம்கார் (33), ரோஹித்பாபு (37), ஆந்திராவைச் சேர்ந்த காட்டி வெங்கடேஷ் திலக்ராம் (35), கேரளாவை சேர்ந்த சோனியாவும் மோகன்(31), உதகையைச் சேர்ந்த அரிஜித் குட்டா (43) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர், என்றார்.