சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றுவதற்கு எதிர்ப்பு : மீண்டும் வனப்பகுதியில் விடக்கோரி சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை : காட்டு யானை சின்னதம்பியை கும்கியாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை : காட்டு யானை சின்னதம்பியை கும்கியாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்த 15 ஆண்டுகளாக மேலாக சின்னதம்பி, விநாயகன் ஆகிய காட்டு யானைகள் தடாகம் பகுதிகளில் சுற்றி திரிந்தன. இந்த இரு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பாதிப்புகளை ஏற்படுவதாகவும், உயிர் பலி ஏற்படுவதாகக் கூறி விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். மேலும், இந்த இரு யானைகளையும் பிடிக்கக் கோரி விவசாயிகள் வனத்துறையினருக்கு மனு கொடுத்தனர். இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் விநாயகன் யானை வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு, முதுமலை வனப் பகுதியில் விடப்பட்டது. 

இதனை தொடர்ந்து, மற்றொரு யானையான சின்னதம்பி கடந்த 25-ம் தேதி பிடிக்கப்பட்டு, வரகலியாறு வனப் பகுதியில் விடபட்டது. இதையடுத்து, கடந்த இரு தினங்களாக வரகலியாறு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சின்னதம்பி, பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் சுற்றி வருகிறது. அதனை மீண்டும் வனப்பகுதிக்கு சின்னத்தம்பியை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, கோவையில் இன்று தனியார் கல்லூரியில் நடைபெற்ற மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு கருத்தரங்கத்தில் பங்கேற்ற வனதுறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஊருக்குள் சுற்றி வரும் யானையை பிடித்து கும்கியாக மாற்றப்படும் என தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள், தடாகம், ஆனைகட்டி, மாங்கரைப் பகுதி இளைஞர்கள் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சின்னத்தம்பியை அதன் வாழ்விடத்திலேயே இருக்க விட வேண்டும், கும்கியாக மாற்றக் கூடாது என கோரி கண்டன கோஷங்களை அவர்கள் எழுப்பினர். மேலும், வரும் திங்கட்கிழமை இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் பன்னீர் கூறுகையில்,” இந்தியா முழுவதிலும் 22,000 யானைகள் இருந்தன. அது தற்போது வெகுவாக குறைந்து உள்ளது. அதற்கு காரணம் அதன் வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளது தான் மிக முக்கிய காரணம். இதற்கு முன் மஹாராஜா யானை எவ்வாறு இறந்தது என அனைவரும் அறிந்ததே. யானைகள் வாழ்விடம் மாற்றப்படும் போது, மணல் கொள்ளை அதிகரிக்கும். மேலும், தனியார் கல்வி நிறுவனங்கள் பல யானை வழித்தடங்களை ஆக்கரமித்து உள்ளதால் தான் யானைகள் ஊருக்குள் வருகின்றன,” என்றார். 

சமூக ஆர்வலர் ஜோஸ்வா கூறுகையில், “தடாகம் பகுதி

செங்கல் சூளைகளில், அதன் உரிமையாளர்கள் ஏராளமான மணல் எடுத்து உள்ளனர். மண் எடுக்கத் தடை விதித்தாலே, யானை வாழ்விடங்கள் காப்பாற்றப்படும்,” என தெரிவித்தார்.

சமூக ஆர்வலர் வனம் சந்திரசேகர் பேசியதாவது :-

காடுகளின் வளர்ச்சியே புலிகளும், யானைகளும் தான். இப்படி இருக்க அதை இடமாற்றம் செய்து, அதன் வாழ்விடங்கள் அழிக்கப்படுவது வேதனை அளிக்கிறது. மேலும், யானை சவாரி உலக அளவில் தடை செய்யப்பட்டு உள்ள நிலையில், இங்கு அது தொடர்கிறது. 

அடர்ந்த காட்டுப் பகுதிகளில் விவசாயம் தவிர்த்து, வேறு இடங்களில் விவசாயம் செய்யலாம். மாற்று பயிர்களை பயிரட வனத்துறை அறிவுறுத்தும் போது, அதனை ஏன் விவசாயிகள் பின்பற்றுவது இல்லை, எனக் கேள்வி எழுப்பினார்.



ஆனைகட்டி பகுதி ஆதிவாசி கரட்டி கூறுகையில்,”

பல வருடங்களாக அங்கு வசித்து வருகின்றன. சின்னத்தம்பியால் யாருக்கும் எந்தவிதமான இடையூறு ஏற்பட்டதில்லை. அதனை அதன் இடத்திலேயே இருக்க விடவேண்டும்,” எனக் கூறி கண்ணீர் மல்க ஒரு பாடலை பாடினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...