நீலகிரி : இந்திய இறையாண்மைக்கு எதிராக பேட்டி அளித்த உடுமலை கவுசல்யாவிடம் இன்னும் ஒரு வாரத்தில் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என வெலிங்டன் கண்டோன்மெண்ட் முதன்மை அதிகாரி ஹரிஸ் வர்மா தெரிவித்துள்ளார்.

உடுமலை கவுசல்யா கடந்த 2016-ம் ஆண்டு குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட் கணக்கு பிரிவில் பணியில் சேர்ந்தார். இவர் அண்மைக் காலமாக, ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அடிக்கடி பேட்டி அளித்து வந்த நிலையில், அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, இந்திய இறையாண்மைக்கு எதிராக அவர் சில கருத்துக்களை கூறினார். இதனால், அவர் மீது துறை ரீதியான விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்குப் பின், கவுசல்யா பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக கண்டோன்மென்ட் முதன்மை அதிகாரி தெரிவித்தார்.
இந்த நிலையில், இது தொடர்பாக கண்டோன்மென்ட் முதன்மை அதிகாரி ஹரிஸ் வர்மா கூறுகையில்," கவுசல்யா மீது பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் புகாரினையடுத்து, அவரிடம் இன்னும் ஒரு வாரத்தில் தனிக் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு, அந்த அறிக்கை டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் தொடர்பாக அவர் மீது மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என்றார்.