சயான், மனோஜின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கின் தீர்ப்பு 8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நீலகிரி : கோடநாடு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கின் தீர்ப்பை 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

நீலகிரி : கோடநாடு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கின் தீர்ப்பை 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். 

கோடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் முதலமைச்சர் பழனிசாமிக்கு கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்பு உள்ளதாக டெல்லியில் பேட்டி அளித்தனர். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதைத்தொடர்ந்து, சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் சாட்சிகளை அச்சுறுத்துவதாகவும், எனவே, அவர்களது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி, கடந்த மாதம் 18-ம் தேதி உதகை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் பாலநந்தக்குமார் மனு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கு கடந்த 24-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அவர்கள் இருவரும் 29-ம் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி வடமலை உத்தரவிட்டிருந்தார். அதன்படி, அன்று இவ்வழக்கு விசாரணைக்காக, சயான் மற்றும் மனோஜ் நேரில் ஆஜராகினர். அப்போது, அரசு மற்றும் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் சில வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வடமலை, அவர்களது ஜாமீனை ரத்து செய்ய மறுத்து, மீண்டும் பிப்., 2-ம் தேதி இருவரையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டார். 

அதன்படி, சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் உதகை நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகினர். அப்போது, அரசு தரப்பின் சார்பாக சிறப்பு அனுமதி பெற்று தமிழக தலைமை வழக்கறிஞர் நடராஜன் ஆஜரானார். அதேபோல, சயான் மற்றும் வாளையார் மனோஜ் சார்பில் சென்னை வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜரானார். காலை 10.30 மணிக்கு வழக்கு வந்த போது, 11.30 மணிக்கு வாதங்களை வைத்துக் கொள்ள நீதிபதி வடமலை அனுமதி அளித்தார்.



 

அதன்படி, ஆஜரான அரசு வழக்கறிஞர் நடராஜன், "குற்றவாளிகள் இருவரும் பிளாக்மெயில் செய்யும் ஒருவருடன் இணைந்து வழக்கை திசைதிருப்ப பேட்டி அளித்தனர். நீதிமன்ற பணிகளில் தலையீடுபோல் உள்ளது. வழக்கு பதிந்து 2 வருடம் கழித்து இந்த நாடகத்தை நடத்தியுள்ளனர். 

சாட்சிகளை மறைமுகமாகவும் மிரட்டியுள்ளனர். தமிழக முதலமைச்சரின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கின்றனர். கொலை செய்ததைப் பேட்டியின் மூலம் ஒத்துக் கொண்டுள்ளனர். இவர்களின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்," இவ்வாறு வாதாடினர்.

இதற்கு பதில் கொடுக்கும் விதமாக, சயான் தரப்பு வழக்கறிஞர் பிரபாகரன், "குற்றச்சாட்டு பதிவில் சாட்சியின் பெயர் இல்லை. சாட்சியை ஏற்றுக் கொள்வதா..? வேண்டாமா..? என நீதிமன்றம் தான் தீர்மானிக்கும். இவர்களின் பேட்டியால் எந்த கலவரமும் நடக்கவில்லை. பொது அமைதிக்கு பங்கம் ஏற்படவில்லை," என்று கூறி உச்சநீதிமன்ற தீர்ப்புகளை எடுத்து முன்வைத்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உதகை நீதிபதி வடமலை, இந்த வழக்கில் வரும் 8.ம் தேதி தீர்ப்பு கூறுவதாகக் கூறி வழக்கை தள்ளி வைத்தார். அதேபோல, கோடநாடு கொலை வழக்கு குற்றவாளிகளையும் அன்றைய தினம் ஆஜராக உத்தரவிட்டார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...