கோவை : எதிர்கால சந்ததியினர் மேற்கு தொடர்ச்சி மலை குறித்து அறியும் வகையில் மேற்கு தொடர்ச்சி மலை குறித்து பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும் என பேராசிரியர் கே.சி.மல்கோத்ரா அறிவுறுத்தியுள்ளார்.

மூன்று நாட்கள் நடைபெறும் மேற்கு தொடர்ச்சி மலையில் சூழலியல் திருவிழாவின் 9 -வது மாநாட்டில் தொடர்ச்சியான விவாதங்களில் இயக்கத்தின் நிறுவனத் தலைவர், பேராசிரியர் கே.சி.மல்கோத்ரா பேசும் போது பாதுகாக்கப்பட்ட காடுகளை விடவும் வெளியே தான் இன்னும் அதிகமான உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றைப் பாதுகாப்பது என்பது அதனை விடவும் அவசியம் என்றார்.
அவர் பேசியதாவது ;- 1987 -ம் ஆண்டு, மேற்கு தொடர்ச்சி மலையைக் காப்பது குறித்து பெருமளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி, 100 நாட்களில் 2000 கிலோ.மீ வரையில் பாதையாத்திரை நடத்தினார் மல்கோத்ரா. இது போன்றதான விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது மிகவும் இன்றியமையாதது. ஏனென்றால், அந்த பகுதிகள் பல்லுயிர்தன்மை மிகுந்ததாகவும், எளிதில் பாதிக்கும் நிலையிலும் இருந்தது.
ஆகையால், மேற்குத் தொடர்ச்சி பகுதிகளில் இருக்கும் மரம் மற்றும் செடிகள் ஆகியவற்றைக் குறித்த தகவல்களை அறிந்து அவற்றைப் பாதுகாப்பது முக்கியமானது. அதில் அதிகம் கவனம் செலுத்தி, அவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும், என்றார்.
மேலும் அவர் பேசுகையில், "மேற்குத் தொடர்ச்சி மலையில் நிலம் வைத்திருக்கும் நபர்கள் அதனைப் பயன்படுத்தும் விதம் குறித்து ஆய்வு செய்து தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் நிலத்தில் விவசாயம் செய்கிறார்களா அல்லது கட்டடம் கட்டுகிறார்களா, என்ன செயல்பாடுகளை செய்கிறார்கள் என அறிந்து கொள்ளவே இந்த ஆய்வாகும்.
மலையை அடிப்படையாகக் கொண்டு பல திட்டங்கள் கையெழுத்தாகிக் கொண்டிருக்கிறது. அந்த திட்டங்கள் புல் மண்டலங்களைப் பாதிக்காதவாறு விதிமுறைகளின் படி செயல்படுத்தப்பட வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்கம் தொடங்கி 30 வருடங்கள் ஆகிறது. அதில், தற்போது அதிகரித்திருக்கும் இளைய தலைமுறையினரின் பங்கேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும், நாம் பள்ளி மற்றும் கல்லூரிகளின் பாடத்திட்டங்களில் எளிய நடையில் மேற்கு தொடர்ச்சி மலைகளைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் வருங்காலத் தலைமுறையினருக்கு தகவல்களைக் கடத்த வேண்டும். அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும், என்றார்.