அடிமைத்தனமாக முடிவடைகிறது சுதந்திரமாக சுற்றித் திரிந்த சின்னத்தம்பியின் வன வாழ்க்கை

கோவை : கோவை தடாகம் பகுதியில் விளைநிலங்களைச் சேதப்படுத்தி வந்த காட்டு யானை சின்னத்தம்பியை, விவசாயிகள் கோரிக்கையை அடுத்து வனத்துறையினர் போராடி பிடித்து சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் அருகே உள்ள வரகலியாரு வனப்பகுதியில் விட்டனர்.

கோவை : கோவை தடாகம் பகுதியில் விளைநிலங்களைச் சேதப்படுத்தி வந்த காட்டு யானை சின்னத்தம்பியை, விவசாயிகள் கோரிக்கையை அடுத்து வனத்துறையினர் போராடி பிடித்து சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் அருகே உள்ள வரகலியாரு வனப்பகுதியில் விட்டனர். 



இந்நிலையில், நேற்று முன்தினம் சின்னத்தம்பி பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலகுறிச்சியில் உள்ள விவசாய தோட்டங்களிலும், குடியிருப்பு பகுதிக்குள்ளும் வலம் வந்தது. 

இதையடுத்து, வனத்துறையினர் சின்னத்தம்பியை முடிந்த வரையில் மீண்டும் அதனைக் காட்டுக்குள் அனுப்பப் போராடுகின்றனர். ஆனால், அது தொடர்ந்து வெளிவருவதனால் அதற்கான மாற்றுக் குறித்து ஆலோசித்து வருகின்றனர் வனத்துறை அதிகாரிகள். 

"வனவிலங்கின் பின்னால் எப்போதுமே அதிகாரிகள் ஓடிக்கொண்டிருக்க முடியாது. இதற்கு ஒரு முடிவு வர வேண்டும். ஏனெனில், இது போன்ற செயல்களால் மனிதர் மற்றும் விலங்கு இருவருமே பாதிக்கப்படுவீர்கள். இது போல வனவிலங்குகள் வலம் வரும் போது நேரும் ஆபத்துகளுக்கு நாங்களே பொறுப்பு, என்கிறார் அதிகாரி ஒருவர். 



இது குறித்து வனத்துறை ஆராய்ச்சியாளர் அஜய் தேசாய் கூறுகையில், "சின்னத்தம்பியின் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லாததால், கூண்டில் அடைத்து மாற்றும் நடவடிக்கையில் வனத்துறை தள்ளப்பட்டுள்ளது. வனப்பகுதியில் வாழக் கூடிய வாய்ப்பு இருந்தும் சின்னத்தம்பி அங்கிருந்து வெளியேறிவிட்டது. நிலை கைமாறியது எதிர்பாராதது. யானைகள் மனித வாழிடங்களுக்குள் வந்து அச்சுறுத்துவது மக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்துகிறது. 

இந்த இக்கட்டான சூழலில் செய்ய வேண்டியது யானைகளின் மனநிலையை மாற்றுவதே. மேலும், பயிர் சேதம் விளைவித்து இடமாறிய விலங்குகள் அதன் புதிய எல்லைப்பகுதியில் இருந்து வெளியேற முயற்சி செய்யும். இதற்கு முன்பாகவும், இடமாற்றம் செய்யப்பட்ட யானைகள் இது போலவே குடியிருப்புக்குள் நுழைந்துள்ளன, என்றார். 

இதனிடையே, கிடைத்த தகவலின்படி, கடந்த வருடம் தடாகத்தில் இருந்து இடம் மாற்றப்பட்ட விநாயகன் முதுமலையிலிருந்து வெளியேற முயற்சி செய்துள்ளது. ஆனால், அதனை முன்நடவடிக்கை மூலம் தடுத்த நிலையில், தற்போது விநாயகன் காட்டுப் பகுதியில் இரை தேடிக் கொள்கிறது. சின்னத்தம்பி, எளிய உணவான பயிரை அதிகம் விரும்புகிறது. 

இந்நிலையில், சின்னத்தம்பியை கட்டுப்படுத்த முடியாத சூழலில் அதனைக் கூண்டு வைத்து பிடித்து கும்கியாக மாற்றுவதே உரிய வழியாக இருக்கும் என்கின்றனர் அனுபவம் வாய்ந்த வனத்துறையினர். இதற்கிடையில், தீப்பந்தம் கொளுத்தி யானை விரட்டும் வனத்துறையினருக்கு உடுமலை பேட்டையை சேர்ந்த சமூக செயற்பாட்டாளார்கள் கண்டனம் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...