கோவை : தமிழக அரசு சார்பில் நடைபெறும் சுய தொழில் முனைவோருக்கான வங்கிக் கடன் வழங்கும் முகாமில், விண்ணப்பித்த அனைவருக்கும் கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை : தமிழக அரசு சார்பில் நடைபெறும் சுய தொழில் முனைவோருக்கான வங்கிக் கடன் வழங்கும் முகாமில், விண்ணப்பித்த அனைவருக்கும் கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் மகளிர் திட்டத்தின் கீழ் சுயதொழில் முனைவோருக்கான சிறப்பு கடனுதவி வழங்கும் முகாம் கோவை பால்கம்பெனி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று தொடங்கியது. இதனை தமிழக உள்ளாட்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு தொடங்கி வைத்ததுடன், முகாமில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது :- சுய தொழில்முனைவோர்களை அதிக அளவில் உருவாக்கும் வகையில், இந்த முகாம் தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகின்றன. இம்முகாமில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கடன் கிடைக்க தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். இம்முகாமில் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் என 39 வங்கிகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன, எனக் கூறினார்.
மொத்தம் 10 வகையான திட்டங்களின் கீழ் ரூ. 50,000 முதல் ரூ. 50 லட்சம் வரையிலான தொழில் கடன்கள் வழங்கப்பட உள்ளன. இம்முகாமில் கடனுதவிக்கு விண்ணப்பிக்க 1,000-க்கும் மேற்பட்டோர் பள்ளியில் குவிந்துள்ளனர். பெட்டிக்கடை முதல் சிறிய ரக தொழிற்சாலை வரை அமைக்க கடனுதவிகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.