கோவையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட டிராபிக் ராமசாமி குண்டு கட்டாக அகற்றப்பட்டார்

கோவை : சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியை, அவரது உதவியாளரான சுபாஷ் குண்டு கட்டாக காரில் ஏற்றி அழைத்து சென்றார்.

கோவை : சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியை, அவரது உதவியாளரான சுபாஷ் குண்டு கட்டாக காரில் ஏற்றி அழைத்து சென்றார். 



கோவை புறநகர் - மாநகர் மாவட்டத்தின் சார்பில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெறவுள்ளது. இதையடுத்து, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ஜூணன், ஒ.கே.சின்ன்ராஜ், ஆறுகுட்டி, எட்டிமடை சண்முகம், கனகராஜ், கஸ்தூரி வாசு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.செல்வராஜ், மகேந்திரன், ஆகியோர் கொண்ட பிளக்ஸ் பேனர் அதிமுக அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ளது. 



கோவை அதிமுக அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்களை அகற்றும் வரை, காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாகக் கூறி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கோவை ஹூசூர் சாலையில் உள்ள அதிமுக அலுவலகம் முன்பு காலை 9.30 முதல் காத்திருப்பில் இருந்தார். அப்போது பேசிய அவர், ஆளும் கட்சி பேனர்களை அகற்றும் செய்ய தயக்கம் காட்டுவதாகவும், இதனை உடனடியாக அகற்றாவிட்டால் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாகவும் கூறினார்.



இதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவரைச் சமாதானம் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், டிராபிக் ராமசாமியின் உதவியாளரான சுபாஷ், அவரை குண்டு கட்டாக காரில் ஏற்றி அழைத்து சென்றார். இதையடுத்து, என்னைக் கொல்கிறார்கள், போலீஸ் அராஜகம் ஒழிக என கோஷமிட்டார். 



மேலும், முன்னதாக தனியார் பள்ளியொன்றில் வங்கி மேளா நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, டிராபிக் ராமசாமி வெளியேறிய தகவல் அறிந்து, கட்சி ஆலோசனைக் கூட்ட நிகழ்வில் கலந்து கொண்டார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...