திருவண்ணாமலை சிறுமிகள் காப்பகத்தில் பாலியல் துன்புறுத்தல் : ஆய்வில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்

திருவண்ணாமலை : வருடக்கணக்கில் அரசு அங்கீகாரம் பெற்ற காப்பகத்தில் பாலியல் ரீதியான கொடுமையை சிறுமிகள் அனுபவித்து வந்தது மாவட்ட ஆட்சியர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

திருவண்ணாமலை : வருடக்கணக்கில் அரசு அங்கீகாரம் பெற்ற காப்பகத்தில் பாலியல் ரீதியான கொடுமையை சிறுமிகள் அனுபவித்து வந்தது மாவட்ட ஆட்சியர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

திருவண்ணாமலையில் அரசு அங்கீகாரம் பெற்ற காப்பகம் மெர்சி அடைக்கலபுரம் மிஷினரி ஹோம் ஃபார் சில்ட்ரென்ஸ். இங்கு, ஆதரவற்ற ஆண் மற்றும் பெண் குழந்தைகள் தங்கி படித்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த இடத்தில் வசிக்கும் சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை தரப்படுவதாகத் திருவண்ணாமலை குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் டி.கோகிலாவுக்கு ரகசிய புகார் வந்துள்ளது. 

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியும், கோகிலாவும் காப்பகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அந்த விசாரணையில், 6 முதல் 17 வயதான சிறுமிகள் பல ஆண்டுகளாக பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியிருப்பது தெரிய வந்திருக்கிறது. மேலும், அவர்களைப் பயன்படுத்தி தவறான முறையில் படம் மற்றும் வீடியோ படமும் எடுக்கப்பட்டிருப்பதும் வெளிவந்துள்ளது. 

“இக்காப்பகத்தில் உள்ள கணினியை ஆய்வு செய்ததில், எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆவணங்கள் அழிக்கப்பட்டிருப்பதாக சந்தேகப்படுகிறோம். போலீஸ் அதிகாரிகள் ஆய்வு நடத்தி அழிக்கப்பட்ட ஆவணங்களை மீட்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம், என்றார் மாவட்ட ஆட்சியர். 

திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு எம்.ஆர்.சிபி சக்ரவர்த்தி, "காப்பகத்தில் கைப்பற்றப்பட்ட ஹார்ட் டிஸ்க், மகிளா நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியுடன் ஆய்வகத்திற்கு அனுப்பி, இழந்த ஆவணங்களை மீட்கும் பணியில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, "என்றார். 

"கடந்த 6 மாதத்தில் மூன்று காப்பகத்திற்கு சீல் வைத்து, மொத்தம் 88 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். அதில், 77 பேர் சிறுமிகள், 11 பேர் சிறுவர்கள். காப்பகத்தில் இருக்கும் பெரும்பாலான பெண் குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மெர்சி காப்பகத்தில் உள்ள குழந்தைகள் குளிக்கும் போது, வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் குளியலறை ஒன்றில் கூட கதவுகள் இல்லை," என திருவண்ணாமலை ப்ரொபேஷனரி அலுவலர் கூறினார். 

மெர்சி காப்பகத்தை நடத்தி வரும் ஓய்வுப்பெற்ற ஆசிரியர் லூபன் குமார் (65) அறை மற்றும் வராண்டாவில் சிசிடிவி கேமராவைப் பொருத்தியுள்ளார். பாலியல் தொல்லைக் கொடுப்பதாக லூபனுக்கு எதிராகச் சிறுமிகள் புகார் தெரிவிக்கையில் மெர்சியும் அவரது சகோதரரும் அவர்களை அடித்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து, லூபன் மற்றும் அவரது மனைவி மெர்சி ராணி (55), அவரது சகோதரர் மணவாளன் (50), ஆகியோர் போக்சோ, ஐபிசி மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 

டைம்ஸ் ஆஃப் இந்தியா நிருபரிடம், குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் மற்றும் காஞ்சிபுரம் குழந்தைகள் நல மையத்தின் முன்னாள் உறுப்பினர் சாஹீருதீன் முகமது கூறும் போது, இந்த காப்பகம் 8 வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்காக இயங்கி வருகிறது. அடிக்கடி சிறுமிகள் பாலியல் ரீதியான அச்சுறுத்தல்களைச் சந்திக்கின்றனர். இதற்கு அதிகாரிகளின் கவனியாமையும் ஒரு காரணம். குறிப்பிட்ட இடைவெளியில் இங்கு சோதனை நடத்தப்பட்டு அவர்களின் நலன் குறித்து ஆராய அவர்கள் தவறிவிட்டார்கள், என்றார். 

மேலும், கடந்த செய்வாய் கிழமை திருவண்ணாமலை அருணை காப்பகத்தில் நடத்திய சோதனையில், அங்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். இதையடுத்து, மேலாளர் ஜி.வினோத் குமார் மீது போக்சோ சட்டம் 2012 -ன், பிரிவு 354 (ஏ) ஐபிசி 8,11, 21 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இச்சம்பவம் குறித்து, அங்கிருந்த 17 வயது நிரம்பிய ஒரு பெண்ணிடம் கேட்கும் போது, மேனேஜர், வினோத் குமார் பெண்களிடம் ஆபாசப்படங்களைப் பார்க்க கட்டாயப்படுத்தியதாகக் கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...