திருப்பூர் : மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டுவதற்காக, பெரியார் இயக்கங்களின் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்ட இடத்திற்கு எதிரே பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிப்ரவரி 10 -ம் தேதி திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் நடைபெறுகின்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசவுள்ளார் . இந்நிலையில், அவர் வருகையை எதிர்த்து பெரியாரிய இயக்கங்களின் சார்பில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடத்திட திருப்பூர் மங்களம் சாலையில் உள்ள பெரியாரிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, தந்தை பெரியார் திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனைக்கூட்ட இடத்திற்கு எதிரே பா.ஜ.க.,வினர் கறுப்புக்கொடி காட்ட திட்டமிட்ட திராவிடர் கழகத்தினரைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதற்கு எதிரே திராவிடர் கழகத்தினரும் எதிர் கோஷமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாஜகவினரோடு பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். பின்பு இராமகிருட்டிணன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறியதாவது :- மதுரையில் மோடி வருகைக்கு கறுப்புக்கொடி காட்டிய திராவிடர் கழகத்தினர் திருப்பூரில் கூடிப் பாருங்கள் என எச்.ராஜா விடுத்த சவாலை ஏற்றுக்கொள்கிறோம். பிப்ரவரி 10 -ம் தேதி திட்டமிட்டபடி கறுப்புக்கொடி காட்டப்படும். திருப்பூரும் பெரியார் மண் என நிரூபிப்போம்.
தொழில்துறை நசிவடைந்து பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், பிரதமர் மோடி திருப்பூர் வருகையை பொதுமக்கள் விரும்பமாட்டார்கள். இன்றைக்கு, பெரியாரிய இயக்கங்களின் சார்பிலான ஆலோசனைக் கூட்டம் முன்னரே தெரிவித்திருந்த நிலையில், பாஜகவினர் எதிரே போராட காவல்துறை ஏன் அனுமதித்தது. கலவர சூழ்நிலையை உருவாக்கவே பாஜக முயன்று வருகிறது, இவ்வாறு அவர் பேசினார்.