கோவை : எழுத்து வடிவில் ஒரு விதை புரட்சி எனும் வடிவமைப்பில், பிரம்மாண்ட மனித சங்கிலியை கோவை ரத்தினம் கல்லூரி மாணவ மாணவிகள் உருவாக்கி தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.
கோவை : எழுத்து வடிவில் ஒரு விதை புரட்சி எனும் வடிவமைப்பில், பிரம்மாண்ட மனித சங்கிலியை கோவை ரத்தினம் கல்லூரி மாணவ மாணவிகள் உருவாக்கி தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.
இயற்கை பவுண்டேசன் தன்னார்வ தொண்டு நிறுவனம், கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு சுமார் 5 லட்சம் மரக்கன்றுகள் வழங்கி உதவிட "ஒரு விதை புரட்சி" உழவனுக்கு வந்தனம் செய்வோம் எனும் பசுமைத்திட்டத்தை தொடங்கியுள்ளது.

இதனை, எங்கும் பரவலாக்க அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளில், "ஒரு மரம் கொடுத்து உதவிடுங்கள், ஒரு விவசாயின் எதிர்கால தலைமுறை வாழட்டும்" என மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது இயற்கை பவுண்டேசன். இதன் ஆரம்பமாக, கோவை ரத்தினம் கல்லூரியில் 2000 மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் மற்றும் இயற்கை பவுண்டேசன் குழுமம் இணைந்து 2000 மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து, எழுத்து வடிவில் ஒரு விதை புரட்சி எனும் வடிவமைப்பில், பிரம்மாண்ட மனித சங்கிலியை மாணவ மாணவிகள் உருவாக்கி தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி பேரா. ஆர். மாணிக்கம், ஆசிரியர் சத்குரு, இயற்கை பவுண்டேசன் நிறுவனர் ம.வினோத் ராஜ், குழுமத்தின் நிர்வாகிகள் அஸ்கர், ராமலிங்கம், கமலி, சரவணகுமார், எட்வின், வெற்றிச்சிலம்பம் ரங்கநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும், தமிழ் மரபுவழி இயக்கம் கமலி, குவைத்திலிருந்து ரமேஸ்குமார், மோகன்ராஜ் மற்றும் பலர் மரக்கன்றுகள் வழங்கிட குழுமத்தின் சார்பாக உதவி புரிந்தனர். சமூகநல அமைப்புகளும், தன்னார்வலர்களும் இந்த ஒருவிதை புரட்சியில் இணைந்து பணியாற்ற வரவேற்கப்படுகிறார்கள்.