கோவை : பொதுமக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து சிறந்த முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக, கோவை சி.ஐ.ஐ., மற்றும் யங் இந்தியா கோவை மண்டலம் ஆகிய அமைப்புகளுக்கு விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள தமிழக பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் உடல்உறுப்பு மாற்று ஆணையத்தின் சார்பில் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது, நிகழ்ச்சியில் பங்கேற்ற உடல் உறுப்பு தானம் வழங்கியவர்களின் குடும்பத்தினருக்கு அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், உடல் உறுப்பு தானம் வழங்கும் மையத்தை வலுவாக்கும் விதமாக, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

பின்னர், உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில், சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் கோவை சி.ஐ.ஐ., மற்றும் யங் இந்தியா கோவை மண்டலம் ஆகிய அமைப்புகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் விருது வழங்கிக் கவுரவித்தார்.
இந்த விருதைப் பெற்றுக் கொண்ட கோவை சி.ஐ.ஐ.யின் தலைவர் எம். ரமேஷ் கூறுகையில், "உடல் உறுப்புகள் தானத்தில் முக்கிய பங்காற்றி வரும் கோவையைச் சேர்ந்த மருத்துவமனைகளின் செயல்பாடுகள் பெருமையளிக்கின்றன. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் மட்டுமே, 'கிப்ட் ஏன் ஆர்கன்' திட்டம் மேம்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் கிப்ட் ஏன் ஆர்கனுக்காக ஏராளமானோர் பணியாற்றியுள்ளனர். இதன் விளைவே, நாம் தற்போது விருது வாங்கியுள்ளோம்," என்றார்.