கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை : இருவர் கைது, 40 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை : கோவை ரயில் நிலையம் அருகே ஆந்திரா மாநிலத்தில் இருந்து கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்ய வந்த இருவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கோவை : கோவை ரயில் நிலையம் அருகே ஆந்திரா மாநிலத்தில் இருந்து கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்ய வந்த இருவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கோவை மாநகரில் பெருகி வரும் கஞ்சா விற்பனையைக் கட்டுப்படுத்த மாநகர காவல்துறையினரும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரும் பல்வேறு சோதனைகள் செய்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை ரயில் நிலையம் முன்பு சமூகவிரோதிகள் சிலர் கஞ்சா பொருட்களை இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்ய கொண்டு செல்வதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார், சந்தேகத்திற்கிடமான இருவரைப் பிடித்து விசாரணை செய்தனர். அதில், இவர்கள் கஞ்சா விற்பனை செய்ய வந்தது உறுதிப்படுத்தப்பட்டது. 

மேலும், போலீசார் தொடர்ந்து விசாரணை செய்ததில், இவர்கள் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ராமண்ணா என்பவரின் மகன் வந்தல ராஜு (30) மற்றும் சுந்தர் ராவ் என்பவரின் மகன் கொண்டா பாபு (41) என்பதும் தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருந்த 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

இந்த கஞ்சாவினை யாரிடம் விற்பனை செய்ய வந்தனர்..?, எப்படி மாணவர்களிடம் விநியோகிக்கின்றனர்...? ஆகிய கோணங்களில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...