ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தொழில்முனைவோருக்கு ரூ. 490 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு

நீலகிரி : புதிதாக தொழில் தொடங்கும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு ரூ. 490 கோடி ஒதுக்கியிருப்பதாக தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துணை தலைவர் முருகன் தெரிவித்தார்.

நீலகிரி : புதிதாக தொழில் தொடங்கும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு ரூ. 490 கோடி ஒதுக்கியிருப்பதாக தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துணை தலைவர் முருகன் தெரிவித்தார்.

உதகை கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துணை தலைவர் முருகன் பேசியதாவது :- இத்திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொழில் முனைவோர் சந்திப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, குன்னூரில் நாளையும், வரும் 8-ம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூரிலும் நடத்தப்படும்.



காதி மற்றும் கிராம தொழில் வாரியம் மற்றும் தேசிய சிறு தொழில் மேம்பாட்டு கழகம் சார்பில் மாநில அளவிலான தொழில் முனைவோர் மாநாடு இம்மாதம் உதகமண்டலத்தில் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தின் பல்வேறு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர தமிழக அரசு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிலை குறித்து தாம் ஆய்வு செய்து வருகிறது. 



மூடப்பட்ட இந்துஸ்தான் புகைப்பட தொழிற்சாலை வளாகத்தில் தகவல் தொழில்நுட்ப முனையம் அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பு மக்கள் கோரியிருக்கின்றனர். இதை மத்திய அரசின் கவனத்திற்கு தாம் எடுத்து செல்ல இருக்கிறோம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் நிகழாத மாவட்டமாக தமிழகத்திலேயே நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்கள் திகழ்கின்றன, என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...