மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டிற்கு சைமா, ஐ.சி.சி.ஐ. அமைப்புகள் வரவேற்பு

கோவை : விவசாயிகள் மற்றும் வரி செலுத்தும் பொதுமக்களுக்கு ஏற்ற வகையிலான மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டிற்கு சைமா, ஐ.சி.சி.ஐ. உள்ளிட்ட அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

கோவை : விவசாயிகள் மற்றும் வரி செலுத்தும் பொதுமக்களுக்கு ஏற்ற வகையிலான மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டிற்கு சைமா, ஐ.சி.சி.ஐ. உள்ளிட்ட அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. 

மத்திய அரசின் 2019-20-ம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் இன்று தாக்கல் செய்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்பினர், மத்திய அரசின் குறிப்பிட்ட சில முக்கிய அம்சங்களுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. 

* தனிநபர் வருமானவரி உச்சவரம்பு ரூ. 5 லட்சமாக உயர்வு. ரூ.6.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்வதற்கு வரி இல்லை. இதன்மூலம், 3 கோடி வரிசெலுத்துவோர் பயனடைவார்கள்.

* கிராஜூட்டி வரிச்சலுகை வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படுகிறது. 

* அமைப்பு சாரா பணியாளர்களுக்கு பணி ஓய்விற்குப் பிறகு பென்சன் கிடைப்பதற்காக மாதந்தோறும் ரூ.100 பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்விற்குப் பிறகு மாதத்திற்கு ரூ.3000 பென்சன் வழங்கப்படும்.

* அஞ்சல் சேமிப்பு திட்டங்களுக்கான டிடிஎஸ் வரம்பு ரூ.10,000 லிருந்து ரூ.40,000 ஆக உயர்த்தப்படும்.

* 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி வழங்கப்படும். இந்த தொகை ரூ.2000 வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். 

* அமைப்பு சாரா பணியாளர்களுக்கு பணி ஓய்விற்குப் பிறகு பென்சன் கிடைப்பதற்காக மாதந்தோறும் ரூ.100 பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்விற்குப் பிறகு மாதத்திற்கு ரூ.3000 பென்சன் வழங்கப்படும்.

* சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 59 நிமிடத்தில் ரூ.1 கோடி கடன் வழங்க நடவடிக்கை

* முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் ரூ.7.23 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

 

* எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினரின் முன்னேற்றத்திற்கான நிதி 25 சதவீதம் ஒதுக்கீடு

* சினிமா தயாரிப்புகளுக்கான ஜி.எஸ்.டி மிக குறைந்த அளவாக 12% விதிப்பு 

* 2018-19 ம் நிதியாண்டில் நிதி பற்றாக்குறை 3.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2018 டிசம்பரில் பணவீக்கம் 2.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

* 36 மூலதனப் பொருட்களுக்கான இறக்குமதி வரி ரத்து மற்றும் சிறு தொழில்களுக்கு சில சலுகைகள் அறிவிப்பு 

* கோவை ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் அகலப் பாதையாக மாற்றப்படும். ஆனால், குறுகிய தூரத்திற்கே இந்த சேவைகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், 2-வது மிகப்பெரிய நகரமான கோவையில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சை, திண்டுக்கல் ஆகிய நகரங்களுக்கு ரயில்சேவைகளை வழங்குவது குறித்து எதிர்காலத்தில் ஆலோசிக்கப்படும், போன்ற பல்வேறு முக்கிய அம்சங்களை வரவேற்பதாக இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது. 

இதேபோல, சைமாவின் தலைவர் நடராஜ், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் சிறு, குறு நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் வருமானம் அதிகரிக்கும்," என்றார்.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...