​கூடலூரில் கைது செய்யப்பட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பு நிர்வாகிகளுக்கு ஜாமீன்

நீலகிரி : கூடலூரில் அனுமதியின்றி தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பு நிர்வாகிகள் 86 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

நீலகிரி : கூடலூரில் அனுமதியின்றி தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பு நிர்வாகிகள் 86 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் (ஜாக்டோ-ஜியோ) கடந்த மாதம் 22-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தினமும் சாலை மறியலில் ஈடுபட்டனர். கூடலூர் பகுதியில் கடந்த 25, 28, 29-ந் தேதிகளில் போராட்டம் நடத்திய 86 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களை கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் கேட்டு கொண்டதால் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ- ஜியோ மாநில நிர்வாகிகள் கூட்டாக அறிவித்தனர். 9 நாட்களுக்குப் பிறகு அரசு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பணிக்கு திரும்பினர்.

இந்த நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே, கூடலூர் பகுதியில் கைதாகி கோவை மத்திய சிறையில் உள்ள 86 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என கூடலூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மணிகண்டன், கருணாநிதி, சாக்கோ ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் 86 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது. இது குறித்து வழக்கறிஞர் மணிகண்டன் கூறும்போது, 86 அரசு ஊழியர்களை ஜாமீனில் விடுவிக்க கூடலூர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதனால், இன்று அல்லது நாளை அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது, என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...