நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவை தொகுதியில் மொத்தம் 5.64 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவை தொகுதியில் மொத்தம் 5.64 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :- நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இம்மூன்று தொகுதிகளில் மொத்தம் 5 லட்சத்து 62 ஆயிரத்து 883 வாக்காளர் இடம் பெற்றிருந்தனர். இதில், பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் செய்தலுக்கு ஏராளமானோர் மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளில் 2 லட்சத்து 72 ஆயிரத்து 803 ஆண் வாக்காளர்களும், 2 லட்சத்து 91 ஆயிரத்து 267 பெண் வாக்காளர்கள் மற்றும் 9 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 5 லட்சத்து 64 ஆயிரத்து 079 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதில், உதகை சட்டமன்ற தொகுதியில் 95 ஆயிரத்து 916 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 03 ஆயிரத்து 121 பெண் வாக்காளர்கள், 7 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1 லட்சத்து 99 ஆயிரத்து 44 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். கூடலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 88 ஆயிரத்து 302 ஆண் வாக்காளர்கள், 91 ஆயிரத்து 882 பெண் வாக்காளர்கள் மற்றும் ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரத்து 185 வாக்காளர்கள் உள்ளனர்.