உதகை ஸ்பீடு படகில் சவாரி செய்ய அதீத ஆர்வம் காட்டும் சுற்றுலாப்பயணிகள்

நீலகிரி : உதகை பைக்காரா படகு இல்லத்தில் ஸ்பீடு படகில் சவாரி செய்ய சுற்றுலாப்பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

நீலகிரி : உதகை பைக்காரா படகு இல்லத்தில் ஸ்பீடு படகில் சவாரி செய்ய சுற்றுலாப்பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

உதகையில்  நிலவும் குளு, குளு காலநிலை அனுபவிப்பதற்காகச் சுற்றுலாப்பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். தொட்டபெட்டா மலை சிகரத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. அங்குள்ள காட்சி முனையில் இருந்து மேட்டுப்பாளையம், குன்னுார், உதகை நகரம், கர்நாடகா மாநில எல்லை, அணைகள் போன்றவற்றை தொலைநோக்கி மூலம் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். 



இதே போல், உதகை  படகு இல்லம், ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, சூட்டிங்மட்டம் உள்ளிட்ட சுற்றுலா ஸ்தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. குறிப்பாக, பைக்காரா படகு இல்லத்தில், 'ஸ்பீடு  படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 



இது குறித்து அதிகாரிகள் கூறும் போது பைக்கார படகு இல்லத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலான இளைஞர்கள் ஸ்பீடு படகுகளில் பயணம் செய்வதையை அதிகம் விரும்புகின்றனர். இவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கூடுதலாக ஸ்பீடு படகு இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...