கோவை : கேரள மாநிலத்தை சேர்ந்த காதல் ஜோடிகள் போத்தனூர் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் ரயில்வே டிராக்கில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கேரள மாநிலத்தை சேர்ந்த காதல் ஜோடிகள் போத்தனூர் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் ரயில்வே டிராக்கில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் அடூர் பகுதியை சேர்ந்தவர் அமல் பி.குமார் (19). இவர் அதே பகுதியில் உள்ள எல்சடாய் என்ற தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும், அவரது வகுப்பில் படிக்கும் கொல்லம் அடூர் பகுதியை சேர்ந்த மாணவி சூர்யா.எஸ்.நாயரும் (18), குமாரும் கடந்த சில நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இவர்கள் இருவரும் கொல்லத்தில் டிக்கெட் எடுத்து போத்தனூர் ரயில் நிலையம் வந்துள்ளனர். அங்கிருந்து கோவை நோக்கி சென்ற தண்டவாளத்தில் நடந்து சென்று நஞ்சுண்டாபுரம் பகுதியில், சுமார் 7 மணியளவில் கோவை நோக்கி வந்த கோட்டயம் - சென்னை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து, அங்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, கோவை கோட்ட ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் இந்த ஜோடிகளின் காதலை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.