கோவை : தமிழகத்தைச் சேர்ந்த தொழில் தலைவர்கள் மற்றும், தொழில் முனைவர்களுடன் கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.

இந்த கருத்தரங்கு ’2020 -க்குள் தொழிலை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான ரகசியம்’ அதாவது ‘Secret to Scaling up in 2020’ என்ற தலைப்பை உள்ளார்ந்து ஆராய்ந்து கண்டறியும் நோக்கில் ஒரே மேடையில், முக்கிய வர்த்தகத் தலைவர்கள், முதலீட்டார்கள், அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் வெற்றி தொழிலதிபர்களை ஒன்று சேர்த்து நடைபெற்றது.
இதில், தைரோகேர் நிறுவனர் டாக்டர்.வேலுமணி தொழிலை நிலைநிறுத்துவது குறித்தும் அதன் வளர்ச்சி குறித்தும் பேசினார். அவர் கூறுகையில், "எப்போதும் இரண்டு தேர்வுகள் உண்டு. ஒன்று நீங்கள் அதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது அதைப் பற்றி ஆலோசிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் நபர்கள் வெற்றி பெற சாத்தியம் அதிகம் கொண்டவர்கள். திறமை தான் அதற்கான சாவி. சவால்களைச் சந்திப்பது என்பது ரொம்ப முக்கியம் கூட. ஒரே ராத்திரியில் 10 -லிருந்து 100 -க்கு வளர்ச்சி அடைவது என்பது அவசியமில்லாதது. அது படிப்படியாக 10 -20, அதிலிருந்து 40 -80 என இருக்க வேண்டும்," என்றார்.

"வளர்ச்சிக்கு ஆர்வம் அவசியமான ஒன்று. வாடிக்கையாளர்களை சந்தோசப்படுத்த நீங்கள் எப்போதும் ஆர்வமாக இருக்க வேண்டும். தொழில் நுட்பத்தை கையாளும் போது அதில் ஆர்வத்துடன் இருக்க வேண்டும். மக்கள் மீது நம்பிக்கை வைப்பது அதைவிடவும் முக்கியம்," என்றார், பேசிக்ஸ் ப்ராண்ட் நிறுவனர், சுஹேல் சத்தார்.

நேச்சுலர்ஸ் சலூன் நிறுவனர் சிகே. குமாரவேல் பேசுகையில், "நிறைய பேர் தொழிலில் வெற்றி பெறுவது பெரிய சவால் என நினைக்கிறார்கள். ஆனால், அந்த பயம் தேவையில்லாதது. வளரும் தொழில் முனைவோர்கள் ஆபத்தான சவால்களை எடுக்க வேண்டும். சரியான திட்டமிட்டு, அடுத்து வரப்போகும் முடிவுகளுக்குத் தயாராக நீங்கள் எதிர்கொள்வது எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது. ஆம், நீங்கள் தவறு செய்வீர்கள். அதே சமயம், தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வதால் நீங்கள் பக்குவப்படுவீர்கள், என்றார்.

ஆம்பியர் எலக்ட்ரிக்ஸ் நிறுவனர், ஹேமலதா பேசும் போது, வளர்ச்சிக்கு நல்ல பழக்க வழக்கங்கள் இன்றியமையாதது. எப்போதும் மனம் தளராமல், தினமும் உங்களுக்கு ஆர்வமானதைச் செய்யுங்கள். அதற்கான பலனை நீங்கள் ஒருநாள் நிச்சயம் பெறுவீர்கள், என நம்பிக்கையூட்டும்படி பேசினார்.

மாற்றம் பவுண்டேஷன், சுஜித் குமார் பேசுகையில், " தொழில் வளர்ச்சிக்கு காரணம் மக்கள் தான். வெற்றியின் ரகசியம் மக்களிடத்தில் தான் உள்ளது. அவர்களே, உங்களுடைய அடையாளத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறார்கள். மேலும், உங்களுடைய தொழிலாளர்களுடனும் நேரத்தைச் செலவிட்டு, அவர்களைப் புரிந்து கொள்ளவும், அவர்களின் தேவைகளையும் தெரிந்து கொள்ளுங்கள். இதனால், உங்கள் தொழில் அபரிவிதமாக வளர்ச்சி அடையும், என்றார்.

இதையடுத்து, அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் குழுவுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அதில், தொழிலில் ஏற்படும் தோல்விகள், சிறு சிறு ஏமாற்றங்கள் குறித்து கையாளுவது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு நிபுணர் குழு, "அதிகப்படியான எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்ளாமல், கவனத்துடன் நிலைமையைக் கையாண்டு உங்கள் இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும்.

வியாபாரம் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் போது, அதனால் பல வேலைவாய்ப்புகளும் சேர்ந்தே உருவாகுவதை அவர்கள் சிந்திக்க வேண்டும். நீங்கள் பெரிய கனவைக் காண வேண்டும், சின்ன தொடக்கத்தோடு ஓடிக் கொண்டே இருங்கள்," என்று பதிலளித்தது.
இந்த கருத்தரங்கு, அந்தந்த துறைகளில் கடுமையான உழைப்புக்குப் பின் வெற்றி பெற்ற தொழிலதிபர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்ததோடு நிறைவடைந்தது.