குடியரசுத் தலைவர் விருது பெற்ற கோவை மாநகர உதவி ஆணையருக்கு சக காவல் அதிகாரிகள் பாராட்டு

கோவை : நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான குடியரசுத் தலைவர் விருது பெற்ற கோவை மாநகர காவல்துறையின் சிறப்பு நுண்ணறிவு பிரிவில் பணியாற்றும் உதவி ஆணையாளர் வெற்றிச் செல்வனுக்கு, சக காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.


கோவை : நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான குடியரசுத் தலைவர் விருது பெற்ற கோவை மாநகர காவல்துறையின் சிறப்பு நுண்ணறிவு பிரிவில் பணியாற்றும் உதவி ஆணையாளர் வெற்றிச் செல்வனுக்கு, சக காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர். 

குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாகப் பணியாற்றிய போலீசார், துணை ராணுவத்தினர் உள்ளிட்டோருக்கு குடியரசுத் தலைவர் விருது, முதல்வர் விருது வழங்கப்படுகிறது. இதில், கோவை மாநகர காவல்துறையில் சிறப்பு நுண்ணறிவு பிரிவில் உதவி ஆணையாளராகப் பணியாற்றும் வெற்றிச்செல்வனுக்கும் இந்த சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. 

இவர், 1996-ம் ஆண்டில் காவல்துறையில் பணியில் சேர்ந்து, கடந்த 2011-ம் ஆண்டு முதல் சிறப்பு நுண்ணறிவு பிரிவு ஆய்வாளராக பணியாற்றினார். இதைத் தொடர்ந்து, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி, அத்துறையில் சிறப்பாக செயல்பட்டதால் உதவி ஆணையராக பதவி உயர்வு பெற்றார். பின்னர், இந்தத் துறையில் தொடர்ந்து இந்து, முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் இவருக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதைப் பெற்ற வெற்றிச்செல்வனுக்கு கோவை மாநகர், மாவட்ட காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இது குறித்து உதவி ஆணையாளர் வெற்றிச்செல்வன் கூறியதாவது:- எனக்கு இந்த குடியரசுத் தலைவர் விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் தொடர்ந்து மத நல்லிணக்கத்தை உருவாக்க செயல்படுவேன். அனைத்து மதங்களும் அன்பை தான் போதிக்கிறது. ஆனால், ஒரு சிலர் அந்த அன்பை விட்டு விட்டு தவறான பாதைகளில் செல்கின்றனர். இதனால், சமூக ஒற்றுமை சீர்குலைகிறது. ஆகவே, மதங்கள் கூறும் அன்பை மட்டும் கடைபிடித்தால் மனிதர்கள் அமைதியாக வாழலாம், என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...