நீலகிரி : முதுமலை புலிகள் காப்பகத்திட்குட்பட்ட வனப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கான மறுவாழ்வு திட்டத்தின் கீழ், ரூ. 10 லட்சம் பெற்றுத்தருவதாகக் கூறி, ரூ. 50 ஆயிரம் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகபிரியாவிடம் புகார் மனு அளித்தனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் சுமார் 321 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதியில் தான் அதிகளவு யானைகள், புலிகள், மான்கள் உட்பட அனைத்து வகையான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், வனவிலங்குகள் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி முதுமலை புலிகள் காப்பகத்தில் வசிக்கும் 400-க்கும் மேற்பட்ட மக்களுக்கு தலா 10 லட்சம் வழங்கி மறுவாழ்வு திட்டத்தில் அரசாங்கம் வெளியேற்ற அறிவித்தது.

அதன்படி, பந்தலூர் அருகேயுள்ள நெலாக்கோட்டை, கொல்லி, பெண்ணை போன்ற கிராமங்களில் வசித்த 50 குடும்பங்களில், அங்குள்ள சில வழக்கறிஞர்கள் 50 ஆயிரம் பணத்தை பெற்று 10 லட்சம் வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகபிரியாவிடம் புகார் மனு அளித்தனர்.