திருப்பூர் : உடுமலை பகுதியில் தற்போது முகாமிட்டுள்ள காட்டு யானை சின்னத்தம்பியை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டுவதற்காக, டாப்சிலிப் முகாமில் இருந்து கும்கி யானைகள் அழைத்துவரப்படுகின்றன.

கோவை தடாகம் பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தி வந்த காட்டு யானை சின்னத்தம்பியை, விவசாயிகள் கோரிக்கையை அடுத்து வனத்துறையினர் போராடி பிடித்து சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் அருகே உள்ள வரகலியாரு வனப்பகுதியில் யானை விடப்பட்டது. இந்த நிலையில், நேற்று அதிகாலை சின்னத்தம்பி பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலகுறிச்சி, ஜெ.ஜெ. நகர், பொங்காலியூர் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய தோட்டங்களிலும், குடியிருப்பு பகுதிக்குள்ளும் வலம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதற்காக, 30 பேர் கொண்ட வனத்துறையினர் 3 குழுக்களாகப் பிரிந்து, கோபாலபுரம் மலையடிவாரத்தில் உள்ள வனப்பகுதி அருகே வனத்துறையினர் முகாமிட்டு, யானையை வனப்பகுதியில் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். சின்னத்தம்பி யானைக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருப்பதால், வனத்துறையினர் இணையதளம் மூலம் அதனை கண்காணித்து வருகின்றனர்.
இன்று உடுமலை அருகே சின்னபாப்பனூத்து, சாலையூர் ஆகிய கிராமங்களில் புகுந்த சின்னத்தம்பி விவசாய நிலங்களில் முகாமிட்டுள்ளது. தற்போது உடுமலை வனத்துறையினரும் சேர்ந்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பலமணி நேரம் போராடியும், யானையை விரட்ட முடியாததால், டாப்சிலிப் வனப்பகுதியிலிருந்து கும்கி யானைகள் வரவழைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து, சின்னதம்பியை விரட்ட கும்கி யானைகள் உடுமலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றன.