வீட்டின் பூட்டை உடைத்து 47 சவரன் நகை கொள்ளை : திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை

திருப்பூர் : திருப்பூரில் ரியல் எஸ்டேட் இடைத்தரகரின் வீட்டின் பூட்டை உடைத்து 47 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் : திருப்பூரில் ரியல் எஸ்டேட் இடைத்தரகரின் வீட்டின் பூட்டை உடைத்து 47 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருப்பூர் - காங்கேயம் சாலை பொன்னம்மாள் லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் நடராஜ். ரியல் எஸ்டேட் இடைத்தரகரான இவர், கடந்த புதன்கிழமையன்று மனைவி கண்ணம்மாள் மற்றும் மகள் அகல்யாவுடன் கும்பகோணத்திலுள்ள திருவிடைமருதூர் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, நேற்றிரவு தங்கள் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். 



அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நடராஜின் குடும்பத்தினர், உள்ளே சென்று பார்த்த போது, வீட்டினுள் இருந்த பீரோக்கள், அலமாரிகள் உடைக்கப்பட்டு மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 47.5 சவரன் நகை மற்றும் ரூ. 81,000 பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.



இதனையடுத்து, நடராஜ் அளித்த புகாரின் பேரில், திருப்புர் தெற்கு போலிசார் கைரேகை மற்றும் தடயங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வீட்டின் கதவை உடைத்த கொள்ளையர்கள் வீட்டின் அலமாரியில் வைத்திருந்த பொம்மையின் கீழ் மறைத்து வைத்திருந்த சாவியையும் கண்டெடுத்து கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...