வாடிக்கையாளரே கட்டண சேனல்களை தேர்வு செய்யும் புதிய நடைமுறை இன்று முதல் அமல்

தொலைக்காட்சி கட்டண சேனல்களை வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் டிராயின் புதிய நடைமுறை அமலுக்கு வந்தது.

தொலைக்காட்சி கட்டண சேனல்களை வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் டிராயின் புதிய நடைமுறை அமலுக்கு வந்தது. 

டிராய் எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், கடந்த ஜூலை 3 -ம் தேதி கேபிள் டிவி ஒழுங்குமுறை சட்டத்தை அறிவித்தது. இதன் படி, தொலைக்காட்சி பார்க்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் நெட்வொர்க் கெபாசிடி கட்டணமாக ரூ.130 மற்றும் 18% ஜிஎஸ்டி வரி ரூ.23 மற்றும் 40 பைசாவுடன் சேர்த்து மொத்தம் ரூ.153 மற்றும் 40 பைசா செலுத்த வேண்டும். 

இதோடு அல்லாது, கட்டணச் சேனல்களுக்கு தனியாக பணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் விருப்பமான சேனல்களை மட்டும் தேர்வு செய்து பார்க்கவும், அதற்கான கட்டணத்தை மட்டும் வசூல் செய்யவும் வழிவகை செய்யும் என டிராய் கூறியது. இந்த திட்டத்தை நிறைவேற்ற கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் டி.டி.எச் நிறுவனங்களுக்கு டிராய் ஜனவரி 31 -ம் தேதி வரை காலம் வழங்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், நாம் விரும்பும் சேனல்களை, நாமே தேர்வு செய்து, அதற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. இனி ஒவ்வொரு வாடிக்கையாளரும் 100 இலவச சேனல்களை அடிப்படை கட்டணத்தை செலுத்திப் பார்க்கலாம். குறிப்பாக, இந்த சேனல்களின் பட்டியலில், தூர்தர்ஷனின் 25 சேனல்களும் அடங்கும். 

மேலும், 100 -க்கும் மேற்பட்ட இலவச சேனல்கள் வேண்டும் என விரும்புவர்கள், ஒவ்வொரு 25 இலவச சேனலுக்கும், கூடுதலாக ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், கட்டண சேனல்கள் தேவைப்படுமாயின் அதற்கும் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு கட்டண சேனலை ஒரு மாதம் பெற்றுக்கொள்ள அதிகபட்சம் ரூ.19 மட்டுமே வாடிக்கையாளரிடம் பெற வேண்டும் என அரசு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...